சோஷியல் மீடியாவில் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் குறும்பு வீடியோக்கள் வைரலாவது வழக்கம. அப்படியான வீடியோக்கள் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தவும், அதிசயிக்கவும் செய்யும். 'அட' என நினைக்க செய்யும் அல்லது மனமுருக வைக்கும் பல வீடியோக்கள் இணையவாசிகளால் ஷேர் செய்யப்பட்டு வைரலாவதும் உண்டு. அப்படியான ஒரு கிளி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கிளி நமக்கு அழகான வீடியோவையே கண்ணுக்கு விருந்தாக்குகிறது. நியூசிலாந்தின் வீட்டு மாடியில் GoPro கேமராவை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் வீடியோ எடுக்க தயாராகியுள்ளது. அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்படும் Kea வகை கிளி அந்த கேமராவை கவ்விக்கொண்டு பறக்கத் தொடங்கிவிட்டது. கேமராவை கிளி தூக்கியதும் அடடா என குடும்பத்தினர் சத்தமிடுகின்றனர்.
வேகமாக பறந்துவரும் கிளி ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிடத்தொடங்குகிறது. அந்த கேமராவை அப்படியே தரையில் போட்டுவிட்டு கிளி தன் வேலையை பார்க்கிறது. கொஞ்ச நேரம் கழித்து கேமராவின் உரிமையாளர் கேமராவை தேடி வந்து எடுக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கிளி பறந்து செல்லும் போது அது வாயில் கவ்வியிருந்த கேமரா காட்சிகளை படம் பிடித்துள்ளது. பார்ப்பதற்கு ட்ரோன் கேமரா காட்சி போல வித்தியாசமாக அந்தக் காட்சி உள்ளது. இதுதான் உண்மையான பறவையின் பார்வை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Kea வகை கிளி:
கிளி என்றதும் நம்ம ஊர் பச்சைக்கிளி போல உருவத்தில் சிறியதாக இருக்காது இந்த Kea வகை கிளி. உருவத்தில் பெரியதாகவும் சிறிய வகை கழுகைப்போலவும் இருக்கும். பொருட்களை தூக்கிச் செல்வது கார் பாகங்களை வாயாலயே உடைப்பது போன்ற பல தொல்லைகளை இந்த கிளி செய்வது வழக்கம். அதனால் GoPro கேமராவை தூக்கிச் செல்வது எல்லாம் இந்தக் கிளிக்கு சர்வசாதாரணம் என பதிவிட்டுள்ளனர் பறவை ஆர்வலர்கள்.
சிசிடிவி கிளி
சில நாட்களுக்கு முன்பு பிரேசிலில் டிராஃபிக் கேமராவில் கிளி ஒன்று கண்ணாமூச்சி விளையாடுவதைப் பதிவு செய்த வீடியோ வைரலானது. தெற்கு பிரேசிலிய மாநிலமான பரனாவில் உள்ள குரிடிபாவில், டர்க்கைஸ்-ஃப்ரன்ட் அமேசான் கிளி, பறந்து களைத்துப்போய் ஓய்வெடுக்க வந்து அமர்ந்தது, அமர்ந்த இடத்தில் ஒரு மின்னணு சாதனத்தைக் கண்டுபிடித்த பிறகு கிளிக்கு ஆர்வம் அதிகரித்தது. நகரத்திற்கு அருகே பிஸியான BR-116 சாலையை பார்த்தபடி பின்னால் வாகனங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க ஒரு கிளி ஆசுவாசமாக கேமராவை பார்த்துக்கொண்டு இருந்தது