பொதுவாக நம்மில் சிலருக்கு சிறிய பூச்சிகளை நமக்கு அருகில் பார்த்தாலே பயம் ஏற்படும். அத்துடன் சிலர் அதை பிடித்து பார்க்கவே மிகவும் யோசனை செய்வார்கள். ஆனால் இங்கு ஒருவருக்கு 3 நாட்களுக்கு மேலாக காதில் பூச்சி சென்றுள்ளது. இதனால் அவர் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். அவருடைய காதுக்குள் பூச்சி எப்படி புகுந்தது?
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸேன் வேட்டிங். இவர் சமீபத்தில் ஒரு நீச்சல் கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீந்தி மகிழ்ந்து வந்த பிறகு அவருக்கு அடுத்த நாள் காலையில் காது வழி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை லேசாக பரிசோதனை செய்த மருத்துவர் சில மாத்திரைகளை அளித்துள்ளார். அந்த மாத்திரைகளை பெற்று கொண்டு இரண்டு நாட்கள் பயன்படுத்தியுள்ளார்.
அதன்பின்பு அவருடைய காது வலி குறையாமல் மிகவும் அதிகமாகியுள்ளது. அத்துடன் அவரின் செவி திறனும் குறைந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவருடைய காதுக்குள் பூச்சி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பூச்சியை வெளியே எடுக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவருடைய காதுக்குள் இருந்து மருத்துவர் சிறிய கருவி ஒன்றை பயன்படுத்தி சில நிமிடங்களில் அந்த பூச்சியை வெளியே எடுத்துள்ளார். வெளியே எடுத்தப்பின்பு தான் அது கரப்பான் பூச்சி என்பது தெரியவந்தது. அந்த பூச்சி வெளியே எடுக்கும் போது உயிரிழந்துள்ளது. இதை மருத்துவர் வேட்டிங் இடம் காட்டியுள்ளார். அப்போது தான் அவருக்கு கடந்த இரண்டு நாட்கள் ஒரு பூச்சி ஒன்று உள்ளே நகர்வது போல் தோன்றிய எண்ணம் உண்மை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இரண்டு நாட்களாக இந்த எண்ணம் தோன்றியுள்ளது. எனினும் அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
அந்தப் பூச்சியை வெளியே எடுத்தபிறகும் அவருக்கு காதுக்குள் ஒரு மாதிரியான உணர்வு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு வாரம் வரை இந்த உணர்வு அவருக்கு இருந்துள்ளது. அவருடைய காதுக்குள் இருந்த பூச்சி ஒன்று எடுக்கப்பட்ட சம்பவம் பெருமளவில் பரவியுள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை..! மருத்துவரின் பெயரைச் சூட்டி மகிழ்ந்த தாய்!