கத்தார் ஏர்வேஸ் விமானம் பயணிகளுடன் நேற்று இரவு நடு வானில் பறந்துக் கொண்டிருந்த்து. அப்போது அதில் பயணித்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டதில் பெண் குழந்தை பிறந்தது.






இது குறித்து விமானத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஆய்ஷா தெரிவித்து இருப்பதாவது, “நான் விமானத்தில் ஒரு தாய்க்கு பிரசவம் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை. பிரசவத்திற்கு உதவிய விமான குழுவினருக்கு நன்றி. தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்த பெண் குழந்தைக்கு எனது பெயரான ஆய்ஷா என்றே பெயரிடப்பட்டு உள்ளது” என டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.


 














இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்திலும், கூடுதலாக மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.


கடந்த ஆண்டும் இது போன்று கத்தார் ஏர்வேஸ் விமானம் 352 பயணிகளுடன் கத்தார் தலை நகர் தோஹாவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு பறந்து கொண்டிருந்தது. அது சமயம் விமானத்தில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு, விமானப் பணிப்பெண்கள் உதவி செய்தனர். அதன் பின்னர் அந்த பெண் ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்.