சூயஸ் கால்வாயின் குறுக்கே கடந்த சில தினங்களுக்கு முன்பு தைவான் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலொன்று சிக்கியது. 6 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த அக்கப்பல் கடந்த 29ம் தேதி பல இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களின் கடும் முயற்சியால் மீட்கப்பட்டது. இந்த 6 நாள் போராட்டத்தின்போது சூயஸ் கால்வாயின் இருமுனையிலும் சுமார் 400-க்கும் அதிகமான சரக்கு கப்பல்கள் மேற்கொண்டு நகரமுடியாமல் நடுக்கடலில் தவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.  




இந்நிலையில் எவர்க்ரீன் நடுக்கடலை அடைந்து தனது பயணத்தை தற்போது தொடங்கிய நிலையில், இருமுனையிலும் காத்திருந்த மற்ற கப்பல்களும் தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் 100-க்கும் அதிகமான கப்பல்கள் கால்வாயின் இருமுனையிலிருந்தும் கடந்து சென்றுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">After the Ever Given was successfully refloated, a salvage team chanted the name of one of the dredgers responsible for freeing the giant ship, allowing traffic to flow again in the Suez Canal. <a >pic.twitter.com/srgSsogHHB</a></p>&mdash; NBC News World (@NBCNewsWorld) <a >March 30, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 
மேலும் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளிக்குள் இருமுனையில் காத்திருக்கும் 250-க்கும் அதிகமான கப்பல்கள்களும் தங்களுடைய பயணத்தை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.