New Year 2023: 2023ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும்  களைகட்டத் தொடங்கியுள்ளன. 


ஆங்கிலப் புத்தாண்டு:


உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பாகுபாடுகள் இன்றி கொண்டாடும் ஒரே விழா என்றால் அது ஆங்கிலப் புத்தாண்டு என கூறலாம். கடந்தாண்டில் ஏற்பட்ட  பலதரப்பட்ட அனுபவங்கள் என எல்லாவறையும் கடந்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய, அடுத்த ஆண்டை வரவேற்கக் கூடிய தருணம் என்றால், ஜனவரி 1 நள்ளிரவு 12 தான். 


கடிகாரம் சரியாக 12 மணியைக் காட்டும்போது அனைவரும், கொண்டாட்டங்களின் போது, “ ஹேப்பி நியூ இயர் “ என கூச்சலிட்டு, வான வேடிக்கைகளோடு கொண்டாடத் தொடங்கி தெரிந்தவர் தெரியாதவர் என அனைவருக்கும் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தும் வருகின்றனர். 


நியூசிலாந்தில் பிறந்த புத்தாண்டு:


இந்நிலையில் உலகின் முதல் புத்தாண்டுக் கொண்டாட்டம், நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்தில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யா, அதன் பின்னர் ஆஸ்திரேலியா என புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதில் கடைசி  நாடாக அமெரிக்கா கொண்டாவுள்ளது. 






இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மத்தியில் இருக்கக்கூடிய அச்சம் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை மிரட்டி வரும் கொரோனா தொற்று பாதிப்பு தான். உலகின் பல்வேறு நாடுகள்  கொரோனா கட்டுப்பாடுகளை உலக நாடுகள் அறிவித்துள்ளது. 






குறிப்பாக இந்தியா உள்ளிட்ட அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்க கூடாது. மக்கள் வெளியில் வரக்கூடாது, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வாழிபாட்டுத் தலங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் புத்தாண்டு வழிபாடுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


களைகட்டத் தொடங்கிய கொண்டாட்டம்:


டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட கோவா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களிலும்,  நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்க இளைஞர் பட்டாளங்கள் தயாராக உள்ள நிலையில், கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தமிழ்நாட்ற்கு அருகில் அமைந்து பாண்டிச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் எனபது மிகவும் கோலாகலமாக பொது மக்கள் கொண்டாடத்துவங்கியுள்ளனர். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.