உலகின் நம்பர் ஒன் பணக்காரர் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ். ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை தளமாக அமோசானை தொடங்கி அதை உலகின் தலைசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமாக உருவாக்கி அசத்தியுள்ளார். இவர் சமீபத்தில் 430 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட கப்பலை வாங்கியுள்ளார். அந்த கப்பலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 360 கோடி ரூபாயாக உள்ளது. 


இந்த பிரம்மாண்ட கப்பல் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இந்த கப்பல் நெதர்லாந்து நாட்டிலுள்ள கடலில் செல்வதற்கு ஒரு பழமை வாய்ந்த பாலம் சிக்கலாக இருந்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் 1879ஆம் ஆண்டு கோனின்ஷிங் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் 1940 உலக போரில் நாசி ஜெர்மனி படைகளால் குண்டு போட்டு சேதப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பாலம் சரி செய்யப்பட்டது. 


இந்நிலையில் அந்த பாலத்தை சற்று இடிக்க உள்ளதாக நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த பாலத்தில் இதற்கு மேல் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டோம் என்று அரசு நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஜெஃப் பெசோஸின் கப்பலுக்காக பாலத்தை சற்று இடிக்க உள்ள உத்தரவை பலரும் எதிர்த்து வருகின்றனர். 


அந்தப் பாலத்தின் நடுப்பகுதியில் ஒரு சில மாற்றங்கள் செய்து கப்பல் எளிதில் செல்வதற்கு வழி வகை செய்யப்படும். அந்த பாலத்தில்  மாற்றங்கள் செய்ய சில மாதங்கள் எடுக்கும் என்று அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் வரும் கோடை காலத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்படும் செலவை அமேசான் நிறுவனம் ஏற்று கொள்ள உள்ளதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் எப்போதும் தன்னுடைய செயல்கள் மூலம் அவ்வப்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர் விண்வெளி பயணம் சென்று வந்தது மிகவும் வேகமாக வைரலானது. அதன்பின்னர் அவர் நடிகர் லியோனார்டா டா வின்சிக்கு ஒரு எச்சரிக்கை ட்விட் செய்திருந்தார்.  மேலும் அவர் தன்னுடைய மனைவி மெகேன்சி ஸ்காட்டை விவாகரத்து செய்யும் செய்தி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரன் சென்சஸை பெசோஸ் காதலிதது வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஆணுறைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இப்படியா?