இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். அந்த நாட்டின் தலைநகராக காத்மாண்டு திகழ்கிறது. இந்த நிலையில் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. சௌரியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான அந்த விமானம் புறப்பட்டபோது திடீரென தீப்பிடித்தது. ஓடுபாதையில் இருந்து விலகி சறுக்கியபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  


விமானத்தில் தீ விபத்து:






இதனால், அங்கு காத்மாண்டுவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் காத்மாண்டில் உள்ள திரிபுவன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் போகரா என்ற பகுதிக்கு சென்ற சிறிய ரக விமானத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


19 பேரும் மரணம்


ஓடுபாதையில் இருந்து மேலெழும்பும்போது வழுக்கிச் சென்று இந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மற்ற பயணிகளின் கதி என்னவென்று இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பிற விமானங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டது. சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்களும், வீரர்களும் குவிந்துள்ளனர். இந்த விமானம் முழுவதும் எரிந்து நாசம் ஆகியுள்ளது. அதிகாரிகள் மற்றும் மீட்பு வீரர்களின் தீயில் கருகிய விமானத்தில் இருந்து 19 பேரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் நேபாளம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.