Nepal Earthquake : நேபாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... குலுங்கிய கட்டடங்கள்... பீதியில் மக்கள்...!

நேபாளத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதியடைய வைத்துள்ளது.

Continues below advertisement

Nepal Earthquake : நேபாளத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதியடைய வைத்துள்ளது.

Continues below advertisement

நேபாள் நிலநடுக்கம்

நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் நோபாளத்தின் பஜுரா என்ற பகுதியில் இருந்து 81 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.  

அடுத்தடுத்து நிலநடுக்கம்

இதனை அடுத்து, சுமார் 2 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பஜுரா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கெபுலாவான்பது  என்ற பகுதியில் இருந்து 81 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், முதல் நிலநடுக்கம் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, நேபாளில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நேபாளை திருப்பி போட்டது.  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 8,694 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மக்கள் மனதில் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.

தொடர் நிலநடுக்கங்கள்:

ஏப்ரல் 17ஆம் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் ஏப்ரல் 22ஆம் தேதி இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 4.3 மற்றும் 5.0 புள்ளியாக இந்த நிலநடுக்கங்கள் பதிவானது.

இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை சோகமாக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். 

Continues below advertisement