2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு முதல் பெண் விண்வெளி வீரரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்காக  மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகம் 39B இலிருந்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. ஆர்ட்டெமிஸ் 1 என்பது ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் இல்லாத விமான சோதனையாக மேற்கொள்ளப்படுகிறது.



2025-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டு வந்தது. கடந்த 3 முறை ஒத்திவைக்கப்பட்ட திட்டமானது, இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.






ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஓரியன் விண்கலம் உள்ளது. நிலவின் மேல்பகுதியில் நிலைநிறுத்தப்படும் ஓரியன் விண்கலமானது, நிலவின் வான்வெளியில் ஆய்வை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்டெமிஸ் - 1 மனிதர்களை ஏற்றிச் செல்லாது. ஆனால் சோதனை முயற்சியாக பொம்மைகளை ஏற்றிச் சென்று பூமிக்கு திரும்பும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 97 கி.மீ., அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது.






கடைசியாக, அப்பல்லோ 17 விண்வெளி விமானம் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்தனர். தற்போது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்ட்டெமிஸ் விண்வெளித் திட்டத்தின்படி விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS) ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.






அமெரிக்க விண்வெளி நிறுவனம் பதிவிட்ட ட்வீட்டில், "ஆர்ட்டெமிஸ் I மனித சந்திர ஆய்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது." என குறிப்பிட்டிருந்தது.



விஞ்ஞான கண்டுபிடிப்பு, பொருளாதார நன்மைகள் மற்றும் உத்வேகத்திற்காக மீண்டும் சந்திரனுக்குச் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. வணிக மற்றும் சர்வதேச கூட்டாளர்களுக்கு முழூ ஒத்துழைப்பு கொடுக்கப்படும் எனவும் சந்திரனில் முதல் நீண்ட கால பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்டெமிஸ் 1 மிஷனை தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு முன்னதாக இரண்டு முறை இதே போல் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.