நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இரண்டு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சியைப் படம் பிடித்துள்ளது. கேலக்ஸி என்றால் விண்மீன்களின் கூட்டம். என்னது நட்சத்திரம் டான்ஸாடுமா என ஆச்சரியமாக யோசிக்கிறீர்களா? இதனைக் கற்பனை செய்து பார்க்கவே கலர்ஃபுல்லாக இருக்கிறதா? பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த நடனத்தை பதிவு செய்திருக்கிறது நாசா. செங்குத்தாக ஒரு கேலக்ஸியும் சமநிலையில் ஒரு கேலக்ஸியின் ஒன்றோரு ஒன்று கைநீட்டி நடனமாடுவது போல இந்தப் புகைப்படம் பதிவாகியிருக்கிறது. இரண்டு விண்மீன் திரள்களும் சுழல்ரக (Spiral Galaxies) கேலக்ஸிக்களாக வகைப்படுத்தப்பட்டாலும் பூமியிலிருந்து பார்க்கும்போது அவை நீள்வட்டங்களாகத் தோன்றுகின்றன.இந்த கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது புதிய கேலக்ஸியை உருவாக்கும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 






இது அவ்வளவு எளிதில் நிகழும் நடனம் அல்ல. பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வது. ஆக,நமது வாழ்நாளில் அல்லது நமது தலைமுறைகளின் வாழ்நாளில் காணக்கூடிய ஒரே நட்சத்திரங்களின் நடனமாக இது இருக்கும் என நாசா கூறுகிறது.


முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம். விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும்  சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  


 



 


நாசா அளித்த தரவுகளின்படி, ISS (சர்வதேச விண்வெளி நிலையம்) 109 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டது, இது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்தைப் போன்றது, அதன் எடை 420 டன். இது பூமியைச் சுற்றி அதிவேகத்தில் பயணிக்கிறது. ISS பூமியை ஒரு மணி நேரத்திற்கு இருபத்தேழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது, இதனால் 90 நிமிடங்களில் ஒரு முழு வட்டத்தை சுற்றி முடிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையம் தினமும் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது என்றும் இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கின்றனர் என நாசா (NASA) தெரிவித்துள்ளது.