நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS)சோலார் பேனலை நிறுவினர்.
இரண்டு விண்வெளி வீரர்களும் ஏழு மணிநேர spacewalk மேற்கொண்டு iROSA பேனலை நிறுவினர். நாசா விண்வெளி வீரர்களான ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் ஏழு மணிநேர விண்வெளி நடைப்பயணத்தில் (spacewalk) சர்வதேச விண்வெளி நிலையத்தில், (ISS) சர்வதேச விண்வெளி நிலைய ரோல்அவுட் சோலார் அரே (iROSA) பேனலை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர்.
ISS இல் 1A, 1B, 2A, 2B, 3A, 3B, 4A மற்றும் 4B என நியமிக்கப்பட்ட எட்டு ஆற்றல் சேனல்கள் உள்ளன. கடந்த வாரம் எதிர்பாராத மின் தடைக்கு பிறகு செயல்பாட்டை மீட்டெடுக்க 1B சேனலில் இருந்து மின் கேபிள் துண்டிக்கப்பட்டது. டிசம்பரில் திட்டமிடப்பட்ட இரண்டு ஸ்பேஸ்வாக்கில் முதன்மையானது இது, மற்றொரு iROSA பேனலை நிறுவ இரண்டாவது ஸ்பேஸ்வாக் திட்டமிடப்பட்டுள்ளது. 4A பவர் சேனலில் வரவிருக்கும் iROSA பேனலை நிறுவுவதற்கு விண்வெளி வீரர்கள் பல போல்ட்டுகளை கழட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் பணியை மெற்கொண்டனர்.
இந்த ஸ்பேஸ்வாக், நிறுவப்பட்ட iROSA க்கு ஏற்ற bracket நிறுவுவதற்காக கடந்த மாதம் தங்கள் முதல் ஸ்பேஸ்வாக்கை மேற்கொண்ட இந்த இரண்டு விண்வெளி வீரர்கள். இது அவர்களுகு இரண்டாவது ஸ்பேஸ்வாக் ஆகும். ஒட்டுமொத்தமாக விண்வெளி நிலையத்தில் இது 256வது ஸ்பேஸ்வாக், இதற்கு முன் பராமரிப்பு அல்லது ISSக்கான மேம்படுத்தல் நோக்கங்களுக்காக ஸ்பேஸ்வாக் நடத்தப்பட்டது.
அடுத்த ஸ்பேஸ்வாக் டிசம்பர் 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, திட்டமிடப்பட்ட ஆறு iROSA பேனல் பொறுத்தும் பணியில் நான்காவது பேனலை நிறுவப்பட உள்ளது. இது ISS இன் மின் உற்பத்தி திறனை 30 சதவீதம் அதிகரிக்கும், இது தற்போதைய 160 கிலோவாட்டில் இருந்து 215 கிலோவாட் வரை அதிகத்திறன் கிடைக்கும். 1B பவர் சேனல் செயலிழந்த பிறகு அது மூடப்பட்டது, பொறியாளர்கள் அதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செயலிழந்த பிறகு solar arrayயின் பாதிக்கப்பட்ட பகுதியை அது தனிமைப்படுத்தியது, மேலும் அதன் இயல்பான இயக்க திறனில் சுமார் 75 சதவீதம் செயல்பட இது அனுமதிக்கிறது.
ஸ்பேஸ்வாக்கின் போது, கசாடா சிவப்பு நிற கோடுகள் கொண்ட உடையை அணிந்திருந்தார், அதே சமயம் ரூபியோ அடையாளம் ஏதும் பொறுத்தப்படாத உடையை அணிந்திருந்தார். இரண்டு விண்வெளி வீரர்களும் எக்ஸ்பெடிஷன் 68 (expedition 68) இன் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பயணம் மேற்கொள்வர். பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் ஆர்ட்டெமிஸ் திட்டம் உட்பட எதிர்கால விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய பல புதுமையான தொழில்நுட்பங்களை சோதனை முறையில் செயல்படுத்துவர்.