கடந்த பிப்ரவரியில் இரவு வானத்தில் தோன்றிய நம்பமுடியாத பிரகாசமான ஒளியானது பூமியை நேராக சுட்டிக்காட்டும் கருந்துளையிலிருந்து வந்தது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, விஞ்ஞானிகள் இதுவரை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தாத தொலைதூர நிகழ்வையும், புலப்படும் ஒளியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட முதல் நிகழ்வையும் குறிக்கிறது. இந்த கருந்துளை ஒளி குறித்த ஆய்வு இரண்டு ஆய்வு இதழ்களில் வெளியாகி உள்ளது.
நேச்சர் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட செய்தியில் கருந்துளைக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்தால் ஏற்பட்ட நிகழ்வு என்றும் மற்றொரு ஆய்வுக் கட்டுரையில் 'காஸ்மாலாஜிக்கல் பிளாக் ஹோல் மூலம் நட்சத்திரத்தின் ஒளியில் இடையூறு ஏற்பட்டு உண்டான ஒரு ஒளிப்பிறப்பு' என்று அந்த இதழ்களில் ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது.
பூமியை நோக்கி வந்த பிரகாசமான ஒளியானது ஒரு நட்சத்திரம் ஒரு பிரம்மாண்டமான கருந்துளைக்கு மிக அருகில் சென்றதன் விளைவாக உருவானது என்று விஞ்ஞானிகள் விளக்கினர். அரிய இந்த நிகழ்வு நமது கிரகத்தில் இருந்து 8.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்தது. AT 2022cmc என அழைக்கப்படும் இந்த ஒளிரும் வெடிப்பின் சமிக்ஞை, பிப்ரவரி 11 அன்று கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பாலோமர் ஆய்வகத்தில் உள்ள ஸ்விக்கி ட்ரான்சியன்ட் ஆய்வகத்தில் முதலில் கண்டறியப்பட்டது.
கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதி ஆகும், அங்கு புவியீர்ப்பு மிகவும் வலுவானது, ஒளி அல்லது பிற மின்காந்த அலைகள் உட்பட எதற்கும் அதிலிருந்து தப்பிக்கபோதுமான ஆற்றல் இல்லை. பொது சார்பியல் கோட்பாடு, போதுமான அளவு கச்சிதமான நிறை ஸ்பேஸ் டைம் என்பதைச் சிதைத்து கருந்துளையை உருவாக்கும் என்று கணித்துள்ளது. எந்த பொருட்களாலும் தப்பிக்க முடியாத அந்த எல்லை இவெண்ட் ஹரிசான் என்று அழைக்கப்படுகிறது