நாசா நிறுவனம் தற்போது சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் வீனஸ் கிரகத்தை குறித்து இரண்டு ஆராய்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாசா நேற்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமிக்கு மிக அருகாமையில் உள்ள கிரகங்களில் ஒன்று தான் வெள்ளி என்று அழைக்கப்படும் வீனஸ் கிரகம். சரியாக சொல்லப்போனால் பூமியில் இருந்து சுமார் 241 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வீனஸ் கிரகம். அதேபோல பூமியில் இருந்து மிக தூரத்தில் உள்ள கிரகம் சனி கிரகமாகும். பூமியில் இருந்து சுமார் 1.40 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அதுவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாசா வெளியிட்ட அறிக்கையில், வீனஸ் குறித்து செய்யவிருக்கும் இரண்டு ஆய்வில் DAVINCI + என்ற திட்டம் வீனஸின் வளிமண்டலத்தை பகுப்பாய்வு செய்யும் என்றும், மற்றும் வெரிட்டாஸ் என்ற திட்டம் வீனஸின் மேற்பரப்பை வரைபடமாக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இதுபோன்ற ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டதில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கிரகமான வெள்ளி கிரகம் ஏறக்குறைய பூமியின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது, இதன் சுற்றளவு சுமார் 12,000 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்பன் டை ஆக்சைடு வாயுவை முதன்மையாக கொண்ட வளிமண்டலம் ஒன்று வீனஸ் கிரகத்தின் நிலப்பரப்புக்கு மேலே ஒரு தடிமனான போர்வையை போல உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக வீனஸ் கிரகத்தில் அதிகபட்சமாக 880 டிகிரி பாரன்ஹீட் (471 செல்சியஸ்) வரை அதிக வெப்பநிலை நிலவும் என்று கூறப்படுகிறது. இந்த வெப்பம் இது ஈயத்தை உருகுவதற்கு போதுமான வெப்பமாகும். அண்மையில் காலமாக வெள்ளி கிரகத்தை விட பூமிக்கு அடுத்து அருகில் உள்ள கிரகமான செவ்வாய் (Mars) கிரகத்தின் மேல் தான் பல ஆராய்ச்சியாளர்களின் பார்வை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian Passenger Flights | இனி நெதர்லாந்து பறக்கலாம்! விமானத் தடையை நீக்கியது அந்நாட்டு அரசு!
இந்நிலையில் நாசா நிறுவனம் 500 மில்லியன் டாலர் செலவில் 2028 முதல் 2030ம் ஆண்டு வாக்கில் இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. வீனஸ் கிரகம் குறித்து நாம் வாழும் இந்த பிரபஞ்சம் குறித்தும் பல அறிய தகவல்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் அறிய முடியும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். நாசா நிறுவனம் கடந்த 1953ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. நிலா, மார்ஸ், வீனஸ் என்று பல ஆராச்சிகளை தொடர்ந்து அந்த நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.