நிர்வாணமாக பொது இடத்தில் நடந்ததால் சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிறைக்குள் சென்று பெண் கைதியையும், பெண் காவலரையும் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீதிமன்றத்தில் பொதுமக்கள் யாரையும் சந்திக்க கூடாது, தெரியாதவர்களிடம் பேசக்கூடாது என்று கூறி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். Intu ஷாப்பிங் சென்டரில் நிர்வாணமாக நடந்து சென்ற ஒரு நபரை இரு வருடங்கள் முன்பு போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது இரண்டு பேரை பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளனர். எரோல் மோர்கன் என்று பெயர் கொண்ட டெர்பியை சேர்ந்த நபர் ஒருவர், பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற வழக்குக்காக HMP நாட்டிங்ஹாமில் சிறையில் இருந்தார். சிறைக்கு சென்றதும் 33 வயதான சக கைதியின் குளியலறைக்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அதற்கு சில நாட்கள் கழித்து சிறையிலும் ஆடைகள் அணியாமல் நிர்வாணமாய் இருந்துள்ளார். அப்போது பயந்துபோன ஒரு பெண் சிறை அதிகாரியை குளியலறைக்கு இழுத்து சென்று வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷான் ஸ்மித் க்யூசி மனநலம் பாதிக்கப்பட்ட எரோலை மருத்துவமனை அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அவர் குறிப்பிட்ட நாளுக்கு முன்புவரை டெர்பியில் உள்ள சிறப்புப் பிரிவில் இருப்பார் என்று தெரிவித்திருந்தது டெர்பி கிரவுன் கோர்ட். மருத்துவர்களால் அவரை சமாளிக்க முடிகிறது என்று அவர்கள் உணரும் வரை அவரை மீண்டும் பொதுவெளியில் விடுவிக்க மாட்டார்கள் என்று தீர்ப்பு எழுதியிருந்தது. நீதிபதி ஸ்மித் எரோல் மோர்கனிடம் பேசுகையில்: "எரோல், நீங்கள் எப்போது விடுவிக்கப்படப் போகிறீர்கள் என்பதற்கு சில விதிகளை நான் உங்களுக்கு வழங்கப் போகிறேன். முதலாவது, உங்களுக்குத் தெரியாத யாரையும் நீங்கள் அணுகக்கூடாது. ஓட்டல், பப், பஸ் அல்லது கடைகளுக்கு செல்லும்போது நீங்கள் அங்குள்ளவர்களிடம் பேசலாம். பெண்கள் கழிப்பறை, உடை மாற்றும் அறைகளுக்குள் நீங்கள் செல்லக்கூடாது. இந்த வரைமுறைகள் எல்லாம் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்." என்று கூறினார்.



பர்டன் சாலையில் இருந்த மோர்கன், ஜூன் 23, 2020 அன்று மதியம் 12.55 மணிக்கு Intu-வில், அவர் நிர்வாணமாக நடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டது. அப்போது அந்த வழக்கைத் நடத்திய வழக்கறிஞர் சாரா ஸ்லேட்டர் கூறுகையில்: “அவர் முழு நிர்வாணமாக intu-வை சுற்றி ஓடினார். உள்ளே இருந்த கடைக்காரர்கள் பாதுகாப்பு ஊழியர்களிடம் அவர் ஒரு கதவு வழியாக உள்ளே ஓடுவதையும், மார்கெட்டின் திசையில் ஓடியதையும் பார்த்ததைக் கூறினார்கள். அவர் மார்க்கெட்டுக்கு அடுத்துள்ள கழிவறைக்குள் ஓடினார் என்று அதில் ஒருவர் கூறியுள்ளார். அவர் அப்போது பெண்கள் கழிப்பறைக்குள் ஓடியிருக்கிறார், எனவே பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அவரை வெளியே இழுத்து வர உள்ளே சென்றார், அங்கு அவர் சுவரில் சாய்ந்து நிற்பதைக் கண்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவரை கழிப்பறைக்கு வெளியே இழுத்து சென்றார், அவர் அவரை அழைத்து செல்லும் போது வழியில் சென்ற ஒரு பெண்ணை அடித்துள்ளார். அழைத்துச்செல்லும் ஊழியர் அவரிடம் 'அப்படி செய்யக்கூடாது'' என்று கூறினார், அதற்கு அவர் 'எனக்குத் தெரியும்' என்று பதிலளித்துள்ளார். அப்போது பொதுவெளியில் உடையின்றி நடந்த குற்றங்களுக்காக அவர் சிறையில் இருந்தபோது புதிய குற்றங்கள் நடந்ததாக சாரா ஸ்லேட்டர் கூறினார்.



ஜூலை 18, 2020 அன்று சக கைதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் அறையில் இருந்தபோது முதல் சம்பவம் நடந்தது என்று அவர் கூறினார். சாரா ஸ்லேட்டர் கூறுகையில்: "அந்த பெண் கைதி குளிக்கும் அறைக்குள் எரோல் நிர்வாணமாக நுழைந்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்டவரின் அந்தரங்கப் பகுதிகளைப் பிடித்து பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். அந்த பெண் கைதி அவரைத் தள்ளிவிட்டு ஓடிவந்துள்ளார். இரண்டாவது சம்பவம் இதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ளது. 


எரோல் குளிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால், பெண் காவலர் ஒருவர் அவரைத் தேடி உள்ளே சென்றுள்ளார். அவர் உள்ளே சென்றபோது எரோல் முற்றிலும் நிர்வாணமாக அவர் முன் நின்றுள்ளார். அவர் அந்த பெண் அதிகாரியை சுற்றிப் பிடித்து, குளியல் அறைக்குள் இழுக்க முயன்றுள்ளார். அங்கு என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் இருந்த அவரை, ஒரு ஆண் அதிகாரி ஓடிவந்து காப்பாற்றியுள்ளார் என்று மிஸ் ஸ்லேட்டர் கூறினார். இந்த சம்பவத்தை தாக்கப்பட்ட அதிகாரி தனது புகாரில் கூறியுள்ளார், என்று ஸ்லேட்டர் குறிப்பிட்டார்.