நூற்றுக்கணக்கான பறவைகள் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோதே திடீரென்று கொத்து கொத்தாக கீழே விழுந்து இறந்த சோகம் மெக்சிகோவில் நடந்துள்ளது. மெக்சிகன் மாநிலமான சிவாவ்வா நகரில் அல்வரோ ஆப்ரெகான் என்ற இடத்தில் சாலையில் பறவைகள் கொத்து கொத்தாக செத்துகிடந்தன.


 ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கேமரா,ஒரே நேரத்தில் டஜன் கணக்கான பறவைகள் தரையில் விழுவதைப் படம்பிடித்தது. இதுதொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள்  சமூகவலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது. நிபுணர்களிடையே கூட குழப்பத்தை உருவாக்கியது. என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தைக் அவர்களால் கண்டுபிடிக்கவில்லை.


மஞ்சள் நிறம் தலை கொண்ட  (சாந்தோசெபாலஸ்) இனத்தின் நூறு பறவைகள் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தன. இது கனடாவிலிருந்து மெக்சிகோவின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்காலத்தை கழிப்பதற்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த பறவைகளின் குழுவாகும்.






 


தெருவில் இறந்த பறவைகளை அகற்ற, அப்பகுதியை சுத்தம் செய்யும் பொறுப்பில் இருந்த பொது சேவைகள் என்ற பிரிவை அக்கம்பக்கத்தினர் அழைத்தனர். இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய பலர் ஆராய்ச்சி மையங்களில் தலையைபிய்த்துக்கொண்டிருக்கின்றனர்


அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து நச்சுப் புகையை சுவாசித்ததன் விளைவாக அல்லது அவை உயர் அழுத்த கேபிளில் ஓய்வெடுத்திருந்தால் மின்சார அதிர்ச்சியால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு, உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.பறவைகள் பெருமளவில் இறந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மஞ்சள் தலை கொண்ட பறவை கனடா மற்றும் அமெரிக்காவில் கூடு கட்டுகிறது. வட அமெரிக்க நாடுகளில் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்கிறது. குறைந்த வெப்பநிலையில் இருந்து தப்பிக்க வடக்கு மெக்சிகோவிற்கு பயணிக்கிறது.


 






இந்த பறவைகள் முன்பு கண்டத்தின் வடக்கின் கடுமையான குளிர்காலத்தில் இருந்து தப்பித்து வரும் மற்ற இடங்களில் இறந்துள்ளன என்று நினைவு உள்ளவர்கள் கூறுகின்றனர்.


இம்முறை, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவை ஒட்டிய மெக்சிகோ மாநிலமான சிஹுவாஹுவாவில் பறவைகள் இறந்து கிடந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக, எல்லையின் மறுபுறத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இறந்துவிட்டன.


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறப்புக்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்று சொல்லப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண