மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குழு ஒன்று அந்த கப்பல் நிறுவனத்தின் மீதும் இலங்கை அரசுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அதிகாரிகள் முயன்றிருந்தால் அந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்திருக்கலாம் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க தேவையான சட்டங்களையும் விதிகளையும் செய்யுமாறு மனுதாரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




சிங்கப்பூரை சேர்ந்த இந்த கப்பல் கடந்த மாதம் 20ம் தேதி இலங்கையை வந்தடைந்தது. ஆனால் மே மாதம் 11ம் தேதியே அந்த கப்பலில் ரசாயன கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்படும் அந்த கப்பலை இலங்கை எல்லைக்கு கொண்டுவந்தது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளனர் மனுதாரர்கள். 25 டன் நைட்ரிக் ஆசிட், 325 மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க சில மூலப்பொருட்களை இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் வேறு சில ரசாயனங்களுடன் இந்த கப்பல் கடந்த 20ம் தேதி இலங்கையை இந்த கப்பல் நெருங்கியபோது தீ பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்நது ரசாயன கசிவு ஏற்படவே கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.


Vandalur Zoo COVID Alert | சிங்கத்துக்கு அடுத்து புலி.? வண்டலூர் பூங்காவில் தற்போதைய நிலவரம் என்ன?


இந்த நிகழ்வு குறித்து எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, வெளிநாட்டு ஊடக மாநாட்டில் பங்கேற்றபோது இந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். "தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, சேதத்தை குறைக்க சில துப்புரவு பணிகளை மேற்கொள்ள தேவையான பணியாளர்களை நிறுவனம் வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். 






விபத்து நடந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு இழப்பீடு வழங்கவும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் துறை மற்றும் அந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை சுற்றுசூழலுக்கு ஆபத்து ஏற்படாத முறையில் அப்புறப்படுத்த அல்லது பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.