உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் இரண்டு மாதங்களாக நீடித்து வரும் மோதல் உலகெங்கிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து, ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்து வருவதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. 


உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரில் புச்சா நகரில் மக்களின் கைகளை கட்டி கொடூரமாக கொலை செய்த வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியது. இதில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அந்த சிறுமிகளின் உடல் மீது முத்திரை குத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. 



இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து வெளியிட்ட பதிவில், ரஷ்ய ராணுவ வீரர்கள் கொடூரர்கள், கொலைக்காரர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுப்படுவோர் யாராக இருந்தாலும் நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார். 


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு : 


கடந்த வாரம் உக்ரைன் நாட்டிலுள்ள புச்சா நகரில் அந்நாட்டு மக்களை தலைக்கு பின்னால் கட்டி ரஷ்ய வீர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகியது. இதைப்பார்த்த உலக நாடுகள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்தநிலையில், ரஷ்ய வீரர்களின் இந்த மோசமான செயலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டுகளை தெரிவித்தார். அதில், புச்சா நகரில் தாக்குதலில் ஈடுப்பட்ட வீரர்கள் நாட்டிற்கே முன் மாதிரியானவர்கள் என்று தெரிவித்தார். 


கண்ணீர் விட்ட பெண் செய்தி வாசிப்பாளர் : 


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்த பாராட்டுகள் குறித்து ஜப்பான் பெண் செய்தி வாசிப்பாளர் யுமிகோ மாட்சுவோ நேரலையில் வாசித்தார். அப்போது அவர், உக்ரைன் நாட்டிற்கு எதிராக புதின் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்'' என்ற வரியை படிக்கும்போதே கடகடவென கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து பொதுமக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து சுரங்கபாதைக்குள் பதுங்கி இருக்கின்றனர் என்று தெரிவித்து தேம்பி அழுக ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு என்னை மன்னிக்கவும், மன்னிக்கவும்..." என்று கூறி தன்னை அமைதிப்படுத்தி கொண்டார். 



இதைப்பார்த்த பலரும் அந்த பெண் செய்தி வாசிப்பாளரை பாராட்டியும், புடின் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண