நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது நாசா. அதுதான் ஏற்கெனவே செய்கிறார்களே எனக் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த முறை மனிதர்களையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.


நிலவில் இருப்பதால் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திப் பழக்க விண்வெளி வீரர்களுக்கு பலகட்டப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக மிகவும் ஆழமான நீச்சல் குளம் ஒன்றை உருவாக்கி அதன் அடித்தளத்திற்கு வீரர்களை செல்ல வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


Neutral Buoyancy Laboratory என இதனை அழைக்கின்றனர். கிட்டத்தட்ட மை இருட்டு சூழலில் வீரர்கள் அங்கு உலாவுகின்றனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முதுகில் உள்ளது. ஸ்கூபா டைவர்கள் உடையில் அவர்கள் அங்கு உலாவுகின்றனர். இந்தப் புகைப்படங்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்டுள்ளது.





;


இந்த பயிற்சி பற்றி நாசா விளக்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் உள்ளது போன்ற தரை அமைப்பு, 6ல் ஒரு பங்கு ஈர்ப்பு விசை உள்ள இடத்தினுள் வீரர்களுக்கு இப்பயிற்சியை அளித்துள்ளோம்.


நீச்சள் குளத்தில் சுவர்களில் கருப்பு நிற திரைகளைப் போட்டுள்ளோன். இதனால் குளத்திற்கு அடியில் சூரிய வெளிச்சம் பெயரளவிலேயே எட்டிப்பார்க்கும். டைவர்களும் உள்ளே சென்ற பின்னர் நீண்ட நேரம் விளக்குகளை அனைத்துவிட்டே உலாவினர். இதேபோல் குறைந்த வெளிச்சத்தில் ஸ்பேஸ் சூட் அணிந்தும் வீரர்கள் உலாவ பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இந்தப் புகைப்படம் நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரைக்கும் 9 கோடி 86 லட்சத்துக்கும் அதிகமானோர் அதனை லைக் செய்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து பார்க்கவே பயமாக இருக்கிறது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.