மொபைல் போன்களுக்கு மேலே சிலர் வித்தியாசமான கவர்களை போடுவதை வாடிக்கையாக வைத்து இருப்பார்கள். அந்தவகையில் ஒருவர் தன்னுடைய மொபைல் போனிற்கு போட்ட கவர் அவருடைய உயிரையை காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது. யார் அவர்? எப்படி அது அவர் உயிரை காப்பாற்றியது?


பிரேசில் நாட்டில் கடந்த வாரம் ஒரு வழிப்பறி சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது வழிபறியில் ஈடுபட்ட நபர்கள் ஒருவர் மீது சரமாறியாக தாக்கியுள்ளனர். அப்போது ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நபரை சுட்டுள்ளார். அந்த சமயத்தில் தாக்கப்பட்ட நபர் வைத்து இருந்த மொபைல் போன் கவர் அந்த தோட்டாவை முழுவதுமாக வாங்கியுள்ளது. மேலும் அவரின் உடற்பகுதியில் துப்பாக்கி தோட்டா நுழையாமல் பார்த்து கொண்டுள்ளது. இதைத் தொடந்து தாக்கப்பட்ட நபர் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த நபருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் அந்த மொபைல் போன் மற்றும் அதன் கவர் உள்ளிட்டவற்றை படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மொபைல் போனின் கவரில் ஹல்க் படம் உள்ளது. 




மேலும் அந்த மோட்டோ ஜி5 மொபைல் போன் முழுவதுமாக பாதிப்பு அடைந்து இருந்த படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படி தன்னுடைய உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய மொபைல் போன் தொடர்பான செய்தி மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. ஆபத்து காலத்தில் நமக்கு எந்த ஒரு பொருளாக இருந்தாலும் எப்படி உதவும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. வழிபறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அத்துடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டு தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதையும் படிக்கவும்:




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: உலகின் முதல் டிரைவர் இல்லாத ரயில் அறிமுகம்.. ஜெர்மன் போனால் போகலாம்!