மனிதர்கள் எவ்வளவு தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை படம்பிடித்து இன்ஸ்டா பயனர்களைக் கவர நினைத்தாலும், தங்கள் குட்டி குட்டி செய்கைகளால் பறவைகளும் விலங்குகளும் அவற்றைத் தூக்கி சாப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


தாய் கொரில்லாவின் க்யூட் செய்கை


அந்த வகையில் முன்னதாக மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களுக்கு தனது குழந்தையை காட்டி மகிழும் கொரில்லா ஒன்றின் செய்கை இணையவாசிகளைக் கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது.


கனடாவில் உள்ள கல்கரி உயிரியல் பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகேந்திர பாகுபலியை தூக்கிக் காண்பிக்கும் சிவகாமி, லயன் கிங் காட்சிகள்போல் உள்ள இக்காட்சியை பயனர்கள் ரசித்து பகிர்ந்து வருகின்றனர். 98,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று இந்த வீடியோ இன்ஸ்டாவில் ஹிட் அடித்து வருகிறது.


 






இன்ஸ்டாவில் ஹிட்


இந்த வீடியோவுக்கு”பெருமைக்குரிய கொரில்லா அம்மா தனது குழந்தையை அனைவரிடமும் காண்பித்து மகிழ்கிறார்” என ஒரு பக்கம் இன்ஸ்டா பயனாளர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், மற்றொரு புறம், ”இந்த விலங்குகளை காட்டில் நிம்மதியாக வாழ விடுங்கள்” என பறவை விலங்கு ஆர்வலர்கள் காட்டம் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக இதேபோல் சிம்பன்சி ஒன்று சாவகாசமாக மனிதர்களைப் போல் அமர்ந்து ஆமை ஒன்றுடன் ஆப்பிள் பகிர்ந்து உண்ணும் வீடியோ ட்விட்டரில் ஹிட் அடித்தது.


 






இந்த வீடியோ செய்தி பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலேயே 3.4 லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண