Morocco Earthquake: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 


மொரோக்காவை உலுக்கிய நிலநடுக்கம்:


வட ஆப்பிரிக்கா நாடானா மொரோக்கோவில் இன்று அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோ மீட்டர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளின் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 23.11 (இந்திய நேரப்படி இரவு 11.11) மணிக்குநிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 6 முறை ஏற்பட்டதாக தெரிகிறது. 19 நிமிடங்கள் தீவிரதன்மையுடன் இருந்த நிலநடுக்கம் அதற்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. 


600-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை:


இதனால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்ட வெளியே பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது.  இதனால் ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.  மேலும், மொரோக்கோவில் உள்ள பழை மதீனா பகுதியும் சேதம் அடைந்துள்ளது.






இது சம்பவந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த மோசமான நிலநடுக்கத்தால் இதுவரை 820 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 300க்கும் மேற்பட்டாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஏற்படுத்திய சோகம் உலக நாடுகளை விட்ட இன்னும் மறையாத சூழல் உள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த ஆண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில், இன்று மெரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது.