ஜேம்ஸ் பாண்ட் தீம் மியூசிக் இசையமைப்பாளர் நார்மன் காலமானார்:
ஹாலிவுட் படங்கள் பட்டியலில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றுமே மக்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் தனி வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தில் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. அவை ரசிகர்களை பெரிதும் ஈர்த்தாலும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் இசையும் ஒரு முக்கிய அம்சம். அதற்கு சான்றாக இரண்டு முறை இந்த திரைப்படத்தின் இசை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மேலும் பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது என்பது கூடுதல் தகவல்.
மான்டி நார்மன் காலமானார் :
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் தீம் மியூசிக்கை இயற்றியவர் பிரிட்டன் இசைமைப்பாளர் மான்டி நார்மன். இவர் ஜூலை 11ம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் வயது 94. இந்த அறிக்கை அவருடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இளமை பருவம் :
1928ம் ஆண்டு லண்டன் மாகாணத்தில் உள்ள கிழக்கு பகுதியில் உள்ள ஒரு யூதப் பெற்றோருக்கு மகனாக பிறந்தார் மான்டி நோசெரோவிச். அவருக்கு சிறு வயதில் இருந்தே இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தனக்கென ஒரு கிட்டாரை தன்னுடைய 16ம் வயதில்பெற்றார் நார்மன். தன்னுடைய ஆரம்ப காலங்களில் பல்வேறு ஸ்டேஜ் ஷோகளில் பங்கேற்றார். " மேக் மீ என் ஆஃபர் ", " எஸ்பிரெஸ்ஸோ பாங்கோ " , " ஸாங் புக் ", " பாப்பி" போன்ற ஸ்டேஜ் ஷோகளுக்கு இசையமைத்தார்.
ஜேம்ஸ் பாண்ட் வாய்ப்பு :
முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் " டாக்டர் நோ" 1962ம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட் "கப்பி" ப்ரோக்கோலி தான் மான்டி நார்மன் அவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கான தீம் மியூசிக் வாய்ப்பினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் பாண்ட் லேட்டஸ்ட்:
" நோ டைம் டு டை" திரைப்படம் தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் லேட்டஸ்ட் திரைப்படம். இப்படம் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதுவரையில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் சீரிஸ்களில் இந்த படம் தான் மிகவும் நீளமான திரைப்படமாகும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியிடப்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அமேசான் நிறுவனம் இப்படத்தை ஒடிடி தளத்திலும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் தொடர்கள் பல பில்லியன் வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் நான்காவது இடத்தில் உள்ளது.