கோட்டபய ராஜபக்ச இன்று காலை மாலத்தீவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் மாலத்தீவிலும்  கோட்டபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து , மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோட்டபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.






”பொதுமக்கள் ஆதரவு அளிக்கவும்”:


இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க ஆதரவளிக்குமாறு இலங்கை மக்களை ராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அரசியல் தீர்வு காணும்படி, சபாநாயகரிடமும் இலங்கை ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.






தற்காலிக அதிபராக நியமித்ததால் குழப்பம்:



ரணிலை தற்காலிக அதிபராக கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது. அதிபர் வெளிநாடு சென்றுள்ளதால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.


துபாய் பயணம் மாற்றம்:


இதற்கு முன், கோட்டபய ராஜபக்ச துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண