Saudi Visiting Places: பருவ மழை காலத்தில் சவுதி அரேபியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா சுற்றுலா தலங்கள்:
மழைக்காலம் இயற்கையை பசுமையான திரைச்சீலையாக மாற்றுகிறது. அதேநேரம், மழைக்கால பயணங்கள் பெரும்பாலும் ஆர்வலர்களுக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக மழை, வெள்ள பாதிப்பால் பயணம் மேற்கொள்வதில் சிரமம் மற்றும் தொற்றுநோய் பாதிப்பு போன்றவை பயண திட்டங்களை அச்சுறுத்தும். இருப்பினும் இந்த பருவமழை காலத்தில், நீங்கள் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டால் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி, செங்கடலின் புத்துணர்ச்சியூட்டும் கடற்கரைகள் அல்லது அசீர் மற்றும் தாயிஃப் போன்ற குளிர்ந்த மலைப்பகுதிகளைக் கண்டுகளிக்கலாம். அங்கு பிரமிக்க வைக்கும் மலைகளுக்கு அப்பால் சென்று, மழைக்காலங்களில் சவுதியின் புதிய பக்கத்தைக் கண்டுகளிக்கலாம்.
1. ஆசீர்:
தென்மேற்கு சவூதி அரேபியாவில் அமைந்துள்ள அசீர் மலைகள் மற்றும் காடுகள் உள்ளிட்டவை, இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. இப்பகுதியின் அதிக உயரம் மற்றும் மிதமான காலநிலை, பசுமை மற்றும் குளிர்ந்த வானிலை ஆகியவற்றை வழங்குகிறது. ஆசீர் என்பது சவுதி அரேபியாவின் கலாச்சார மையமாகும். அபாவில் உள்ள ஷாதா பேலஸ், அபா டேம் ஏரி மற்றும் அபா பேலஸ் தீம் பார்க் போன்ற இடங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
இது தவிர, அல் முஃப்தாஹா கலை கிராமம், அபாவின் கேபிள் கார்கள் மற்றும் அசீர் பிராந்திய அருங்காட்சியகம் ஆகியவற்றின் கலாச்சார செழுமையையும் அனுபவிக்க முடியும். அல் ஹபலா மற்றும் ரிஜால் அல்மாவின் பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் கலாச்சார அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. பாராகிளைடிங், ஜிப்-லைனிங் மற்றும் மவுண்டன் பைக்கிங் போன்ற சிறந்த ஹைகிங் மற்றும் சாகச விளையாட்டுகளையும் அசீர் வழங்குகிறது. சாகச ஆர்வலர்கள் அபு கேயல் பூங்கா, நீர்வீழ்ச்சி பூங்கா மற்றும் சௌதா மலைக்கு அருகில் உள்ள அசீர் தேசிய பூங்கா ஆகியவற்றில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
2. தாயிஃப்:
'ரோஜாக்களின் நகரம்' என்று அழைக்கப்படும் தாயிஃப், குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை அழகு காரணமாக பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது. அல் ஷஃபா மற்றும் அல் ஹடா மலைப் பகுதிகள் அவற்றின் பசுமையான நிலப்பரப்புகளுக்கும், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளுக்கும் பெயர் பெற்றவை. மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் வான்வழி காட்சிகளை வழங்கும் அல் ஹடாவில் கேபிள் கார் சவாரிகளை அனுபவிக்கலாம். தாயிஃப் அதன் ரோஜா பண்ணைகளுக்கு பிரபலமானது. இந்த நகரம் சிறந்த நடைபயணம் மற்றும் மலையேற்ற வாய்ப்புகள், கிங் ஃபஹ்த் கார்டன் போன்ற குடும்பத்துடன் செல்வதற்கான பூங்காக்கள் போன்றவற்றயும் கொண்டுள்ளது.
3. அல் பஹா:
சாகச விரும்பிகளுக்கு, அல் பஹா அதன் வரலாற்று கோபுரங்கள், பசுமையான காடுகள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றுடன் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, நடைபயணம் மற்றும் முகாம் போன்ற திறந்தவெளி நடவடிக்கைகளுக்கு ஏற்றது. ஷாடா மலைகள் மற்றும் பழங்கால குகைகள், பளிங்குக் கல் கிராமமான டீ அய்ன் உங்களை ஆச்சரியப்படுத்தும். வசீகரிக்கும் அல் கர்ரா நீர்வீழ்ச்சி மற்றும் அதன் ஊடாடும் நீர் அம்சங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது. அல் பஹா ஒரு குறிப்பிடத்தக்க சாகச விளையாட்டுகளுக்கான சிறந்த இடமாகும்.
4. ரியாத்:
இந்த துடிப்பான நகரம் பண்டைய வரலாற்றை நவீனத்துடன் கலக்கிறது. அரேபியாவின் கடந்த கால மற்றும் எதிர்காலத்தில் மறக்கமுடியாத பயணத்தை வழங்குகிறது. அருங்காட்சியகங்களை ஆராயலாம் மற்றும் வரலாற்று கட்டிடக்கலையை கண்டு வியக்கலாம்.
5. செங்கடல்:
செங்கடல் பிரம்மிப்பூட்டும் நிலப்பரப்புகளுடன் புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த துடிப்பான பவளப்பாறைகள் கவனத்தை ஈர்க்கும். ஸ்நோர்கெல்லிங் மற்றும் டைவிங் போன்ற நீர் விளையாட்டுகளில் நல்ல பொழுதுபோக்காக அமையும்.