உலகம் முழுவதும் 92 நாடுகளில் 12 இறப்புகளுடன் 35,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தகவல் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 92 நாடுகளில் இருந்து 35,000 க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தொற்றால் இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 7,500 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தை விட இது 20% அதிகரித்துள்ளதாவும் தெரிவித்தார். 






மேலும், இந்த குரங்கு தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் முக்கியப் பங்காற்றலாம். இருப்பினும், பல நாடுகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 






அறிகுறிகள் :


குரங்கு அம்மை நோய்களுக்கான முதற்கட்ட அறிகுறிகளாக சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கட்டிகள் தென்படுதல் ,தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை கூறப்படுகிறது.இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.குரங்கம்மை நோயினை சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  குரங்கம்மை தொற்று நோய்  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்பதால், இதற்காக ஊரடங்கு குறித்து எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.  உலக சுகாதார அமைப்பின்  தொற்று நோய்கள் தொடர்பான இரண்டாவது அவசர கூட்டம் இன்று  ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவில் சர்வதேச சுகாதார அவசரநிலை என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


எவ்வாறு பரவுகிறது..? 


 ஒருவருக்கொருவரை கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் மற்றும் படுக்கை, துண்டுகள் மற்றும் ஆடைகளைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட நெருக்கமான தோலிலிருந்து தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், எவருக்கும் இந்நோய் வரலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.