தொடர்ந்து 14 வருடமாக கர்ப்பமாக உள்ள ஒரு அமெரிக்க பெண் இதுவரை 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது 13 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார் என்னும் செய்தி பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.


14 வருட கர்ப்பம்


இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தற்போது அனைவரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்ட என்று அறிவுறுத்தப் படுகிறது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைவு, மக்கள் தொகை நெருக்கம் குறைவு, அதனால் எந்த அளவீடுகளும் இல்லை. பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று கூறுவார்கள் நம்மூரில், அதனை அப்படியே அர்த்தம் புரிந்து கொண்டார்களோ என்னவோ, அமெரிக்க ஜோடி பேட்டி ஹர்னாண்டஸ், கார்லோஸ் இருவரும் உண்மையாகவே 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்று 17வது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். 



குழந்தைகள் லிஸ்ட்


இந்த ஜோடிக்கு ஆறு ஆண்களும் பத்து பெண்களும் உள்ளனர், அதில் மூன்று ஜோடி இரட்டையர்கள் அடங்குவார்கள். குழந்தைகளின் பெயர்கள் கார்லோஸ் ஜூனியர் வயது 14, கிறிஸ்டோபர் வயது 13, கார்லா வயது 11, கெய்ட்லின் வயது 11, கிறிஸ்டின் வயது 10, செலஸ்டி வயது 10, கிறிஸ்டினா வயது 9, கால்வின் வயது 7, கேத்தரின் வயது 7, காலேப் வயது 5, கரோலின் வயது 5, கமிலா வயது 4, கரோல் வயது 4 சார்லோட் வயது 3, கிரிஸ்டல் வயது 2, மற்றும் கிளேட்டன் வயது 1 ஆகும்.


தொடர்புடைய செய்திகள்: “ரூ. 5 ஆயிரம் கொடுங்க; மனைவியை சேர்த்து வைக்குறேன்!” மந்திரவாதியை போட்டுத்தள்ளிய கணவர்! காரணம் இதுதான்!


ஆண் குழந்தை


"தற்போது நான் 13 வார கர்ப்பமாக இருக்கிறேன், என் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை சமீபத்தில்தான் அறிந்துகொண்டோம். நான் 14 வருடங்களாக தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறேன், தற்போது எனது 17வது குழந்தையைப் பெற்றெடுக்கப் போவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன்", என்று அந்த தாய் கூறினார்.



20 குழந்தைகள் வேண்டும்


பேட்டி கடந்த ஆண்டு மே மாதம் தனது இளைய குழந்தையான கிளேட்டனைப் பெற்றெடுத்தார். அவர் தனது கடைசி கர்ப்பம் மிகவும் கடினமானது என்று முன்பு கூறினார். பேட்டி இதோடு நிறுத்தப்போவதில்லையாம், 20 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நம்புகிறார். தற்போது வயிற்றில் உள்ள குழந்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்துவிடும். இன்னும் 3 ஆண் குழந்தைகளைப் பெற விரும்புகிறார், அப்போதுதான் 10 ஆண் குழந்தைகளையும் 10 பெண் குழந்தைகளையும் கொண்ட குடும்பமாக மாறும் என்று கூறுகிறார். இந்த தம்பதியினர் கருத்தடை செய்துகொள்ள மறுக்கின்றனர். அவர்கள் தனது குழந்தைகளை பிரசவிக்கும் மருத்துவமனையில் செவிலியர்களால் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதாக பேட்டி கூறினார். "கடந்த ஆண்டும் நீங்கள் இங்கு இருந்தீர்கள், ஒவ்வொரு ஆண்டும் உங்களைப் பார்க்கிறோம், என்பது போல் அவர்கள் நடவடிக்கை அன்பாக இருந்தது," என்று அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.