அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குளிர்காய்ச்சலுக்கு தரப்படும் மாத்திரைகள் கொரோனாவுக்கு எதிராகச் செயலாற்றுவதாக கண்டறிந்துள்ளனர். குளிர்காய்ச்சல் ஏற்படுத்தும் இன்ஃப்ளூயன்சா வைரஸ்களைக் கட்டுப்படுத்த மோல்நியூபிரவீர் ரக மாத்திரைகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அவை தற்போது பெருந்தொற்றான கொரோனா வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கெனவே ரெம்டசிவிர் உள்ளிட்ட மருந்துகள் சர்வதேச சந்தையில் விற்கப்பட்டுவரும் நிலையில் தற்போது மோல்நியூபிரவீர் குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு 12 மணிநேரத்துக்குள் இந்த மாத்திரை செலுத்தப்படும் நிலையில் அவை சிறப்பாகச் செயலாற்றுவதாக ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் பதிவு செய்துள்ளனர். வெள்ளை எலிகளில் கொரோனா வைரஸை முழுவதுமாக கட்டுப்படுத்தும் இந்த மாத்திரைகள் தற்போது மனிதர்களில் செலுத்தப்பட்டு இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளது.