அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 71வது மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை மிஸ் யுஎஸ்ஏ ஆர்’போனி கேப்ரியல் கைப்பற்றினார்.
ஆடை வடிவமைப்பாளரான இவர், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் பிலிப்பைன்ஸ் அமெரிக்கர் என்று கூறப்படுகிறது. மிஸ் வெனிசுலா, அமண்டா டுடாமெல் மற்றும் மிஸ் டொமினிகன் குடியரசு, ஆண்ட்ரீனா மார்டினெஸ் ஆகியோர் முறையே முதல் ரன்னர்-அப் மற்றும் இரண்டாவது ரன்னர்-அப் ஆக முடிந்தது, அதே நேரத்தில் இந்தியாவின் திவிதா ராய் முதல் மூன்று இடங்களுக்கு தேர்ச்சியாகவில்லை. இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர்.
மூன்று இறுதிப் போட்டியாளர்களுக்கான போட்டியின் கடைசி கட்டத்தில், கேப்ரியல் மிஸ் யுனிவர்ஸ் வெற்றி பெற்றால், "ஒரு அதிகாரம் அளிக்கும் மற்றும் முற்போக்கான அமைப்பு" என்பதை நிரூபிக்க எப்படி வேலை செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இந்த பதவியை நான் முறையாக ஒரு சிறந்த தலைவராக மாற பயன்படுத்துவேன். இந்த சமூகத்தில் பிறருக்கு உதவி செய்வதும், பிறருக்காக யோசிப்பதும் மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டு, தனது ஆடை வடிவமைப்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி மனித கடத்தல் மற்றும் மனிதர்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளரான திவிதா ராய், போட்டியில் தன்னை ஆதரித்த பார்வையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.
இது பற்றி தனது Instagram பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முழு இதயத்துடனும் உறுதியான மனதுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பார்க்கிறேன், இந்த அழகான வாய்ப்பையும் அனுபவத்தையும் கொடுத்து வழிகாட்டிகளுக்கும் நன்றி. இந்தியா என்னை ஆதரித்ததற்கும் என்னை உற்சாகப்படுத்தியதற்கும் நன்றி! ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பை நான் உணர்ந்தேன்” என பதிவிட்டிருந்தார்.