இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வங்காள தேசத்தில் நடைபெற்ற வரும் போராட்டத்தில், இதுவரை சுமார் 186 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிவிகின்றன. 


வங்காள தேச வன்முறை:


வங்காள தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம், சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வங்காளதேசம் மோதலில் தத்தளித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த வன்முறையில் குறைந்தது 186 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.


1971 இல் வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் வரை ஒதுக்கப்பட்ட, இடஒதுக்கீடு முறையை நிறுத்தக் கோரி மாணவர் குழுக்களால் தொடங்கப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2009 முதல் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு, இது போராட்டம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய மக்கள் புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.


இந்திய வெளியுறவுத்துறை:


இந்த சூழ்நிலை குறித்து இந்திய அரசு தெரிவித்துள்ளதாவது, வங்காள தேசத்தின் நிலைமையை இந்தியா கவனித்து வருவதாகவும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை வங்கதேசத்தின் உள்விவகாரமாக கருதுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியா, வங்கதேசத்தின் நெருங்கிய அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இருப்பதால், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும், மாணவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. 




இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்


தாயகம் திரும்பிய மாணவர்கள்:


இந்நிலையில் தற்போது, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது என்றும் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்படுவதால் நாடு மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாக தகவல் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், வங்காள தேசத்தில் இருக்கும் மாவர்களை, பாதுகாப்பாக , தாயகம் அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து சுமார் 6,700 இந்திய மாணவர்கள் திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


Also Read: Kamala Harris Obama: இந்தியர்கள் ஷாக்..! கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிக்காத ஒபாமா? ஆண் வேட்பாளருக்கு ஆதரவு?