உலக அளவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர் மைக் டைசன். இவருக்கு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில்,55 வயதான மைக் டைசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சக பயணிகளுடன் மைக்டைசன் அமர்ந்திருந்தார். அப்போது, பின்வரிசையில் இருந்த இளைஞர் ஒருவர் மைக் டைசனை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்டிருந்தார். இதனால், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மைக் டைசன் விமானம் என்றும் பாராமல் அந்த இளைஞருக்கு சரமாரியாக குத்துக்களை விட்டார். குத்துச்சண்டையின் போட்டிகளின் ஜாம்பவனாக வலம் வந்த மைக் டைசனின் குத்துக்களை தாங்க முடியாமல் அந்த இளைஞர் நிலைகுலைந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக மைக் டைசனை தடுத்து சமாதானப்படுத்தினர். மைக் டைசன் விட்ட குத்தில் அந்த பயணிக்கு முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. மேலும், முகமும் வீங்கியது. அந்த இளைஞரை மைக் டைசன் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிலும் காயமடைந்த நபர் மைக் டைசனை சீண்டுவதும், மற்றொரு நபர் அதை வீடியோ எடுப்பதும் தெரியவந்தது.
மைக் டைசனுக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்த அந்த பயணி தொல்லை அளித்ததாலும், தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசி தொந்தரவு அளித்தாகவும் மைக் டைசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சான்பிரான்சிஸ்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மைக் டைசனுக்கு இடையூறு அளித்த மைக் டைசனால் தாக்கப்பட்ட ஒரு வாலிபர் உள்பட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மைக் டைசன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்