இன்று உலக நாடுகளில்  “உலக பூமி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையிலும், காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.




வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூள் வெளியிடுவது வழக்கம். போலவே, இந்தாண்டு உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு டூடுளை வெளியிட்டிருக்கிறது.






உலக பூமி தினம், 1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் ‘பூமி தினம்’கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை புகைப்படங்கள் மூலம் டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.






டூடுளில் உள்ள புகைப்படங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன,பனிக்கட்டி உருகுதல் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறது.


இந்தாண்டு 'Invest In Our Planet'. என்று தீம் ஆக இருக்கிறது.


இந்த டூடுளைக் காண கிளிக் செய்யவும்-  https://www.google.com/doodles/earth-day-2022


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண