முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் கடந்த புதன்கிழமை மாலை (ஏப்ரல் 20) சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புளோரிடா செல்லும் விமானத்தில் சக பயணி ஒருவரை தாக்கிய வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 


மைக் டைசன் விமானத்தில் ஏறியதில் இருந்து அவருக்கு பின்னாடி அமர்ந்து இருந்த இளைஞர் ஒருவர், தொடர்ந்து மைக் டைசனிடம் பேச முயற்சி செய்துள்ளார். முதலில் கண்டுகொள்ளாத டைசன், தனது இருக்கையில் அமைதியாக உட்கார்ந்துள்ளார். 






தொடர்ந்து, மைக் டைசனுக்கு பின்னாடி இருந்த இளைஞர், மைக் டைசனுக்கு காது அருகில் சென்று குஷு, குஷு வென்று பேசிக்கொண்டே இருந்துள்ளார். முதலில் டைசன் அமைதியாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் அந்த இளைஞர் அதே செயலை செய்ய, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத டைசன் பின்னால் திரும்பி அந்த நபர் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். 


தாக்கப்பட்ட அந்த இளைஞரின் முகத்தில் இருந்து ரத்தமும் வடிந்து ஓடியுள்ள காட்சியும் அந்த வீடியோவில் நாம் காண முடிகிறது. மேலும், சிறிது நேரத்தில் மைக் டைசன் விமானத்தில் பயணிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. 



இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க காவல்துறை மற்றும் JetBlue விமான நிறுவனமும் இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


மைக் டைசன், எல்லா காலத்திலும் சிறந்த ஹெவிவெயிட் சாம்பியனாக கருதப்பட்டாலும், அவரை சுற்றி எப்பொழுது ஏதாவது ஒரு சர்ச்சை வட்டமடித்து கொண்டு தான் இருக்கும். கடந்த 1997 ஆம் ஆண்டு மோதலில் எவாண்டர் ஹோலிஃபீல்டிக்கு எதிரான போட்டியில் மைக் டைசன் அவரது காதை கடித்தார். அதேபோல், அவர் மீது கற்பழிப்பு மற்றும் கோகோயின் போதைப்பொருள் போன்ற வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண