உலகம் முழுவதும் இணையதளத்தில் அதிகமாக பார்க்கப்படுவது ஆபாச படங்கள் தான். இந்த திரைப்படங்களில் நடித்து அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த நடிகர்களில் ஒருவர் ரொனால்டு ஜெரேமி. இவர் 1979ஆம் ஆண்டு முதல் ஆபாச திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரை கிட்டதட்ட 1700 ஆபாச திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் மீது அவ்வப்போது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறி வந்தனர். அது தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இவர் மீது கிட்டதட்ட 34 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1996ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பாலியல் குற்றங்களில் இவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதாவது இவர் 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை பல வயது பெண்களின் மீது பாலியல் குற்றங்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளில் சுமார் 34 பாலியல் குற்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
ஏற்கெனவே ஒரு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெரேமி மீது தற்போது மேலும் சில குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இவர் 2014-2019 ஆண்டு காலங்களில் 3 பெண்கள் மீது பாலியல் சீண்டல் செய்த வழக்கில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அப்போது இவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், "ஜெரேமி மீது எந்தவித தவறும் இல்லை. இவர் ஒரு ஆபாச நடிகர் என்பதால் இவர் மீது ஆர்வம் கொண்டே பெண்கள் இவருடம் வருகின்றனர்" எனக் கூறினார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை தொடர்ந்து ஜெரேமியால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் முன்வந்து புகார் கொடுக்க தயாராக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் ரகசியமாக பெற்ற புகாரின் பெயரில் தற்போது ஜெரேமி மீது மேலும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு 15 வயது சிறுமியையும், 2008ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரையும் இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கடைசியாக 2020ஆம் ஆண்டு கூட 21 வயது மதிக்க தக்க பெண் ஒருவரை இவர் பாலியல் வன்கொடுமை செய்யதுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்களை வைத்து பார்க்கும் போது அவருக்கு தண்டை வழங்க வேண்டும் என்றால் மொத்தமாக 300 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் தான் இந்த வழக்கில் எந்த தீர்ப்பு வரும் என்பது உறுதியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க:’புர்கா எல்லாம் போட முடியாது!’ - தலிபானுக்கு எதிராக ஆன்லைன் புரட்சியில் ஆஃப்கான் பெண்கள்!