Oldest Crocodile Henry: உலகின் வயதான முதலையாக கருதப்படும் ஹென்றி, 5 மீட்டர் நீளம் மற்றும் 1 டன் எடையை கொண்டுள்ளது.


உலகின் வயதான முதலை:


சுமார் ஆயிரம் கிலோ எடையுடன், 16 அடி உயரமுள்ள இந்த முதலை, ஆயிரக்கணக்கான குஞ்சுகளுக்குத் தந்தையாக இருக்கிறது, இப்போது உலகின் மிக வயதான முதலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனிதனை உண்ணும் வகையான நைல் இனத்தைச் சேர்ந்த, இந்த ஹென்றி எனப்படும் முதலையின் வயது 123 ஆகும். தற்போது வரை தனது 6 மனைவிகளுடன் சேர்ந்து 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளது.


ஹென்றியின் பயணம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, தென்னப்ரிக்காவின் போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் தொடங்கியது.  அங்கு டிசம்பர் 16, 1900ல் பிறந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதன் பயங்கரமான கோரைப்பற் போன்ற பற்கள் மற்றும் பாரிய உடலமைப்புக்கு பெயர் பெற்ற ஹென்றி, தற்போது ஏறக்குறைய மினிபஸ் அளவிலான நீளம் கொண்ட மிகப்பெரிய உயிருள்ள முதலையாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவரது கடந்த காலம் சாதாரணமானது அல்ல. 






ஹென்றியின் மோசமான கடந்த காலம்:


1900 களின் முற்பகுதியில், போட்ஸ்வானாவில் உள்ள உள்ளூர் பழங்குடியினர் மத்தியில் ஹென்றி ஒரு மோசமான வேட்டையாளிகவே கருதப்பட்டது. காரணம்,  அது மனிதக் குழந்தைகளை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. பழங்குடியினர், ஹென்றியின் ரத்தவெறி கொண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டனர். இதற்காக ஒரு புகழ்பெற்ற வேட்டைக்காரரான சர் ஹென்றி நியூமனின் உதவியை நாடினர். அவர் மிருகத்தைக் கொல்வதற்குப் பதிலாக அதனை சிறைபிடித்தார்.  அவரது  ஹென்றி என்ற பெயரே அந்த முதலைக்கும் சூட்டப்பட்டது. அதனைதொடர்ந்து, தற்போது வரை அந்த முதலை மனிதர்களின் பராமரிப்பிலேயே உள்ளது.


கடந்த மூன்று தசாப்தங்களாக, ஹென்றி தென்னாப்பிரிக்காவின் ஸ்காட்பர்க்கில் உள்ள க்ரோக்வேர்ல்ட் பாதுகாப்பு மையத்தில் வசித்து வருகிறது. அங்கு, தனது அளவு மற்றும் வயதைக் கொண்டு பார்வையாளர்களை தொடர்ந்து பிரமிக்கச் செய்து வருகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட பழமையான முதலைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஹென்றியின் இருண்ட, மனிதர்களை உண்ணும் கடந்த காலம் மறைந்து, உயிரியல் பூங்காவின் ஈர்ப்பாக அதன் தற்போதைய வாழ்க்கை மாறுபட்டுள்ளது.


நைல் முதலை வரலாறு:


ஹென்றி ஒரு நைல் முதலை, இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 26 நாடுகளில் காணப்படுகிறது. இந்த வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்த முதலைகள், அவற்றின் கடுமையான இயல்புக்கு பெயர் பெற்றவை, ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாகின்றன.


ஹென்றி மிகவும் பழமையான முதலை என்றாலும், மிகப்பெரிய முதலை என்றால் அது ஆஸ்திரேலியாவில் வாழும் 16 அடி உப்பு நீர் முதலையான காசியஸ் தான். 1984 இல் கைப்பற்றப்பட்ட காசியஸ், குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள கிரீன் தீவில் உள்ள மரைன்லேண்ட் மெலனேசியா முதலை வாழ்விடத்தில் ஒரு நட்சத்திர ஈர்ப்பாக மாறியுள்ளது.