12 ஆண்டுகளாக 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் அதிசய மனிதர்.. ஆனாலும் செம்ம FIT.. யார் இந்த ஹோரி?

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் நபரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானை சேர்ந்த ஒருவர், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகக் கூறி வியப்பில் ஆழ்த்துகிறார்.

Continues below advertisement

தூக்கம் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். நல்ல ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க தூக்கம் அவசியம். பெரும்பாலான மக்கள் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு நாளும் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.

Continues below advertisement

வியப்பில் ஆழ்த்தும் அதிசய மனிதர்:

ஆனால், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் நபரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானை சேர்ந்த ஒருவர், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இருந்தபோதிலும் தான் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரின் பெயர் டெய்சுகே ஹோரி. இவருக்கு வயது 40. மேற்கு ஜப்பானில் ஹியோகோ பகுதியில் வசித்து வருகிறார். இம்மாதிரியாக தூங்குவது தன்னுடைய வேலை திறனை மேம்படுத்துவதாக இவர் கூறுகிறார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் விரிவாக பேசிய அவர், "குறைந்த தூக்கத்திலும் வழக்கமாக செயல்பட எனது மூளை மற்றும் உடலுக்கு பயிற்சி அளித்துள்ளேன். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் விளையாடினாலோ அல்லது காபி குடித்தாலோ நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம்" என்றார்.

யார் இந்த டெய்சுகே ஹோரி?

வணிகத்தில் ஈடுபட்டு வரும் டெய்சுகே ஹோரி, இசை, ஓவியம் மற்றும் இயந்திர வடிவமைப்பின் மீது தீரா காதல் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு நாளும் அதிக நேரம் சுறுசுறுப்பாக செயல்பட தனது தூக்கத்தைக் குறைக்கத் தொடங்கினார் டெய்சுக் ஹோரி.

இறுதியில் தனது தூக்கத்தை தினமும் 30 முதல் 45 நிமிடங்களாகக் குறைத்தார். இவர், சொல்வது உண்மையா என்பதை கண்டறிய தன்னுடைய ரியாலிட்டி ஷோவில் பங்கு கொள்ள வைத்தது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. 

ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது, ஒருமுறை வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே தூங்கி இருக்கிறார். ஆனால், தூங்கி எழுந்த பிறகு, சுறுசுறுப்பாகவே இருந்துள்ளார். ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

"தங்கள் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பவர்கள், நீண்ட தூக்கத்தை விட உயர்தரமான தூக்கத்தால் அதிகம் பயனடைகிறார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குறுகிய காலமே ஓய்வு எடுக்கிறார்கள். ஆனால், அதிக செயல்திறனை கொண்டுள்ளார்கள்" என கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் டெய்சுக் ஹோரி.

குறைவாக தூங்கும் பயிற்சியை 2,100 மாணவர்களுக்கு கற்று கொடுத்துள்ளார் ஹோரி. அவரிடம் பயற்சி பெற்ற மாணவர் ஒருவர் கூறுகையில், "ஹோரியிடம் பயிற்சி பெற்ற பிறகு எனது தூக்கத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களாக குறைக்க முடிந்தது" என்றார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola