உக்ரைன் மீதான் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து 30 ஆண்டுகளாக ரஷ்யாவில் தனது கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த மெக்டொனால்ட்ஸ் கார்ப் துரித உணவு குழுமம் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.


மெக்டொனால்ட்ஸ் ஒரு புகழ்பெற்ற துரித உணவுச்சாலை. இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது.


1940-ம் ஆண்டு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மற்றும் மோரிஸ் மெக்டொனால்டு சகோதரர்களால் மிகவும் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட `டிரைவ்-இன்' ஹாம்பர்கர் ரெஸ்டாரன்ட்தான் இன்று உலகமே கண்டு வியக்கும் `மெக்டொனால்ட்ஸ்'. அந்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது இந்த உணவகம். 


பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் மற்றும் சில சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.


உலகம் உலகமயமாக்கலுக்கு பழகிக் கொண்டிருந்த வேளையில், மெக்டொனாட்ஸ் நிறுவனம் அதன் பரவலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்பட்டது. மெக்டொனால்ட்ஸ், மேற்கத்திய நாடுகளில் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளர்களே மெக்டொனால்ட்ஸை நாடுகின்றனர்.  




இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து 30 ஆண்டுகளாக ரஷ்யாவில் தனது கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த மெக்டொனால்ட்ஸ் கார்ப். துரித உணவு குழுமம் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் உள்ளா 847 கிளைகளை மூடுவதாக மெக்டொனால்ட்ஸ் அறிவித்தது. இதனால் மாதத்தில் 50 மில்லியன் டாலர் வர்த்தக இழப்பு அந்நிறுவனத்திற்கு ஏற்படும். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள எல்லா கிளைகளையும் விற்றுவிடுவதாக முடிவு செய்துள்ளது. மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் அமைந்துள்ள பிரதான மெக்டொனால்ட்ஸ் கிளை உள்ளிட்ட அனைத்து கிளைகளையும் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்தக் கிளைதான் ரஷ்யாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட கிளை. 1990 ஆம் வருடம் இக்கிளை தொடங்கப்பட்டது. இப்போது அனைத்துக் கிளைகளும் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் பிராண்ட் பெயரை பயன்படுத்திக் கொள்ள மெக்டொனால்ட்ஸ் அனுமதித்துள்ளது.


மெக்டொனால்ட்ஸைப் போல் இன்னும் பல மேற்கத்திய நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களை உள்ளூர்வாசிகளிடமே விற்றுவிட்டுக் கிளம்ப முடிவு செய்துள்ளன. காரணம், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்காக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பலவும் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இதனாலேயே பல மேற்கத்திய நிறுவனங்களும் மூட்டை கட்டி வருகின்றன. தனது 800க்கும் மேற்பட்ட கிளைகளை மூடினாலும் கூட ரஷ்யாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விற்பனை முடியும் வரை சம்பளம் வழங்கப்படும் என்று மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது.