NASA Insight Lander: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். அங்கு இருக்க கூடிய நீரோடை தடங்கள், பாறைகளின் நீர் அறிக்கப்பட்ட தன்மை,குளம் இருந்ததற்கான தடங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். மேலும், நீரானது  சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும் கருத்துகள் வெளிவந்தன. 

Continues below advertisement

இந்நிலையில், தற்போது நாசா ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் கடலே இருக்கிறது என்றும் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த கடலளவு நீரானது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11.5  கி.மீ முதல் 20 கி.மீ ஆழத்தில் நீர் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இன்சைட் விண்கலம்: 

இந்த தகவலானது, நாசாவின் இன்சைட் என்ற விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ளது. இந்த விண்கலத்தின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு கருவிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில்தான் , விஞ்ஞானிகளுக்குச் ஆச்சரியமான தகவல் கிடைத்திருக்கிறது. அதன்மூலம், செவ்வாய் கிரகத்தின் கீழடுக்குகளில் நீர் தேக்கங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

Continues below advertisement

உயிரினங்கள் வாழ்கிறதா?

ஆரம்பத்தில், செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதாக என ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீர் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போது நீர் இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இது , உலகளவிலும் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து, மனிதர்கள் வாழ்வதற்கான வழி இருக்கிறதா, நீர் இருக்கும் பகுதியில் ஏதேனும் சிறு உயிரினங்கள் இருக்கிறதா என வருங்காலத்தில் ஆராய்ச்சிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Sunita Williams: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 2025-இல் தான் வருவாரா? நாசா சொன்னது என்ன?