மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 82 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் முதல் காலாண்டின் வருவாய் விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மார்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.


மெட்டா நிறுவன வருவாய் விவரம்:


நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மெட்டா நிறுவனம் 28.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 2.34 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த 27.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 2.28 லட்சம் கோடி ரூபாயை விட 3 சதவிகிதம் அளவிற்கு அதிகமாகும். உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் 27.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 2.26 லட்சம் கோடி மட்டுமே நிறுவனத்தின் வருவாயாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அதைவிட சுமார் 80 ஆயிரம் கோடி ருபாய் கூடுதல் வருவாயாக கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் மெட்டா நிறுவனத்திற்கு தினசரி பயானளர்கள் 201 கோடியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 204 கோடியாக இருந்ததே வருவாய் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. 


ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு உயர்வு:


வருவாய் தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்புகள், கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 14 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது. இதன் மூலம் மெட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த ஆண்டு கடுமையாக சரிந்தது. இதனால் வெகுவாக குறைந்த ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு தற்போது 140 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.


கை கொடுத்த செயற்கை நுண்னறிவு


செயற்கை நுண்ணறிவு மூலமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாகவே, விளம்பரங்கள் மூலமான வருவாய் அதிகரித்ததாக மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். மேட்டவெர்ஸில் கவனம் செலுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் கடந்த 2021ம் அண்டு மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 13 சதவிகித பங்குகளை ஜுக்கர்பெர்க் தன் வசம் வைத்துள்ளார். தர்போது இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.


அதிகரித்த சொத்து மதிப்பு:


இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் ஜெஃப் பெசூசிஸ் சொத்து மதிப்பு 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், லாரி பேஜின் சொத்து மதிப்பு 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது.