அசாத்தியமான விஷயங்களை எளிதாக செய்து சாதனை மனிதர்களாக வளம் வருபவர்களின் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் தான் இந்த ஸ்டீவ் கீலர். சுண்டி விரல்ல தூக்குவேன் என்று வாய் சவடால் விடுபவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதனை செய்தே காட்டி சாதனை படைத்துள்ளார் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் கீலர். தற்காப்பு கலை நிபுணர் ஆன இவர் இந்த சாதனையை நிகழ்த்தி அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க செய்துள்ளார். 


கின்னஸ் சாதனை


பளு தூக்கும் திறமை கொண்டவரான இவர் தற்போது புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். தன்னுடைய நடு விரலை வைத்து மட்டும் 129.50 கிலோ எடையை தூக்கி இவர் ஒற்றை விரலில் அதிக எடை தூக்கிய நபர் என்ற சாதனையை தற்போது புரிந்துள்ளார்.



எப்படி செய்தார்?


129.50 கிலோ எடை கொண்ட ஜிம் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஆறு இரும்பு வட்டங்களை ஒன்றாக வைத்து அதை தனது நடு விரலில் தூக்கி சுமார் எட்டு வினாடி நேரம் நிறுத்தியுள்ளார் ஸ்டீவ். இந்த சாதனையை இவர் கடந்த பிப்ரவரி மாதம் புரிந்த நிலையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவருக்கு இப்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


முந்தைய சாதனைகள்


இதன் மூலம் 10 ஆண்டு கால கின்னஸ் சாதனையை இவர் தற்போது முறியடித்துள்ளார். இதற்கு முந்தைய சாதனையை பெனிக் இஸ்ரயேல்யான் என்ற நபர் 121.70 கிலோ எடையை தூக்கி படைத்திருந்தார். அதேபோல், அர்மேனியாவின் சுரேன் அக்பக்யான் என்பவர் பலம் குறைவானதாக கருதப்படும் சுண்டு விரலில் 110 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






பிளாக் பெல்ட்


கராத்தேவில் கறுப்பு பெல்ட் வைத்திருக்கும் நபரான ஸ்டீவ் இந்த பளு தூக்குவதை தனது அன்றாட பயிற்சியில் ஒன்றாக வைத்துள்ளார். தனது சாதனை குறித்து ஸ்டீவ் கூறுகையில், "இதை தூக்குவதற்கு மிகவும் சிரமமாகவும் வலியாகவும் இருந்தாலும், எனது விரல் பலம் வாய்ந்ததாக இருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த சாதனையை முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது தந்தை மூலமாக தான் எனக்கு இந்த பயிற்சி அறிமுகமானது. அவருக்கு மிகவும் நன்றி", என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.