வான்கோழிகளை துரத்திச் செல்லும் குட்டி யானை ஒன்று கீழே விழுந்து மீண்டும் எழுந்து  தாயிடம் ஓடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


வாயில்லா ஜீவன்களின் குட்டி சேட்டைகளை பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. அப்பழுக்கற்ற அன்பை அப்படியே கடத்தும் அந்த ஜீவின்களின் செல்ல சேட்டைகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போதும் ஒரு வீடியோவைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில், “ குட்டியானை ஒன்று அங்கிருக்கும் மான் ஒன்றை துரத்தி செல்கிறது. யானை துரத்துவதை பார்த்த அந்த மான் அங்கிருந்து ஓட, மானை துரத்துவதை நிறுத்திய அந்த யானை அங்கிருந்த வான்கோழிகளை துரத்த ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வான்கோழிகளை வேகமாக துரத்திய அந்த யானை ஒருக்கட்டத்தில் பொத்தென்று கீழே விழுகிறது.  






குட்டியானை கீழே விழுந்ததை பார்த்த தாய் யானை அய்யோ என் கண்ணே என்று நெருங்கி வர.. அம்மா நான் விழுந்துட்டேன் என்ற ரீதியில் தாய் யானையிடம் சென்று தஞ்சம் புகுகிறது அந்தக் குட்டியானை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண