இயற்கை நமக்கு அளித்த வளங்களை நாம் பாதுகாத்துக்கொள்ள எப்போதும் தவறி வருகிறோம். அதன் விளைவு தான் இந்த காலநிலை மாற்றம், புவி வெப்பம் மயமாதல் ஆகியவை. மேலும் நீர், காற்று, நிலம் ஆகியவை மாசுப்படவும் நம்முடைய செயல்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த உலகில் நாம் வாழ தகுதியான சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்காமல் விட்டால், நாம் இறுதியில் வாழ இடமில்லாமல் செத்து மடிய வேண்டிய சூழல் உருவாகும். இதற்கு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி பொருத்தமாக இருக்கும். 


அதாவது முதலில் நாம் எவ்வாறு இயற்கை வளங்களை பாதுகாக்காமல் அழிக்கின்றோமோ அதேபோல் பின்னர் நம்மை இயற்கை சூழல் பாதுகாக்காமல் அழித்துவிடும். இந்த வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,"ஒரு இளைஞர் மரத்தை வெட்டி அதை கீழே தள்ள தன்னுடைய கால்களால் உதைக்கிறார். அப்படி வெட்டப்பட்ட மரத்தின் பகுதி பின்பு அவருடைய தலையில் விழுகிறது" போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாம் எதை செய்கிறோமோ அது நமக்கு திரும்பி வரும் என்பதை இந்த வீடியோ உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 






இந்த வீடியோவை தற்போது வரை 87.7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் சில கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, "நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அது உங்களுக்கு திரும்பி வரும்- நல்லது அல்லது கேட்டது" எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவிற்கு பலரும் ஆதரவாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 






 






 






இவ்வாறு சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்காமல் விட்டால் அது நம்மை கடைசியில் கைவிட்டுவிடும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஆகவே மனிதர்களாகிய நமது தலையாய கடமை சுற்றுச்சூழலை முடிந்த வரை மாசுபடாமல் பாதுகாப்பதாகவே இருக்கவேண்டும் என்பதுதான்..


மேலும் படிக்க: தீ விபத்தை தடுத்த 4வயது சிறுமி- தந்தை வெளியிட்ட வீடியோ!