பொதுவாக நமது வீடுகளில் மின்சார கோளாறு காரணமாக ஒரு சில நேரங்களில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தீ விபத்தை நாம் சரியாக கவனித்தால் தடுக்கம் முடியும். ஒருவேளை சரியாக கவனிக்காத பட்சத்தில் அது பெரிய தீ விபத்தாக மாறிவிடும். அப்படி ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ பெரியளவில் பரவாமல் தடுக்க நான்கு வயது சிறுமி கவனமாக செயல்பட்டு உதவியுள்ளார். யார் அவர்? எப்படி தீ விபத்தை தடுத்தார்?
அமெரிக்காவின் ஃப்ளோரிடா பகுதியில் வசித்து வருபவர் டேனியல் பேட்ரிக். இவர் தன்னுடைய நான்கு வயது மகள் அமேலி ஜெரமியுடன் தன்னுடைய வீட்டில் வசித்து வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் இவர் தன்னுடைய வீட்டில் இருந்து பணி செய்துள்ளார். அந்த சமயத்தில் இவருடைய வீட்டின் சமையல் அறையில் ஒரு மின்சார சாதனத்தை பயன்படுத்தி சமையல் செய்துள்ளார். அந்த சாதனத்தில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக தீ பற்றியுள்ளது.
அந்த சமயத்தில் வீட்டைச் சுற்று பாடலுக்கு நடனம் ஆடி கொண்டிருந்த அமேலி இந்த தீயை பார்த்தவுடன் உடனடியாக தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனே ஓடி வந்த பேட்ரிக் அந்த சாதனத்தை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சமையில் அறையில் தீ பரவாமல் கட்டுபடுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பேட்ரிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “என்னுடை மகள் எங்கள் வீட்டில் நடக்க இருந்த பெரிய தீ விபத்தை தடுத்துள்ளார். இன்றைக்கு என்னுடைய மகள் தான் உண்மையான ஹீரோ” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அச்சிறுமியின் செயலையும் பலரும் வியந்து பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த சிறுவயதில் விளையாட்டு தனமாக இருந்த சிறுமி திடீரென தங்கள் வீட்டில் தீ விபத்து நடப்பதை தடுத்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த சிறுமி மட்டும் சரியான நேரத்திற்கு தந்தையிடம் சொல்லாமல் இருந்திருந்தால் அவர்களின் வீட்டின் சமையல் அறை முழுவதும் தீ பரவி இருக்கும் என்று தந்தை டேனியில் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ‛போங்க தம்பி... வேளச்சேரி, முடிச்சூர் வந்து பாருங்க...’ வைரல் வீடியோவிற்கு வந்த கமெண்ட் !