சீனாவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சினிமாவில் பொதுமக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற சூப்பர்மேன்கள் வருவது போல, நாம் ஆபத்தில் இருந்தாலும் காப்பாற்ற அப்படி யாரும் வரமாட்டார்களா என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் நம்மைச் சுற்றி உள்ள ஒருவர் தான் அப்படிப்பட்ட ஒருவராக பல நேரங்களில் நம்மை காப்பாற்றுவார்கள். அப்படியான ஒரு சம்பவம்  சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் நடைபெற்றுள்ளது. 






ஷென் டோங் என்ற நபர் தனது காரை அங்குள்ள தெரு ஒன்றில் நிறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று ஷென் டாங் பார்க்க முயன்றுள்ளார். அப்போது இரண்டு வயது குழந்தை ஒன்று அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியின் ஜன்னலில் இருந்து இருந்து விழுவதைக் கண்டார். இதனைக் கண்ட அந்த நபர் உடனடியாக சுதாரித்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோவை சீன அரசு அதிகாரி லிஜியன் ஜாவோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 






அதில் நம்மிடையே உள்ள மாவீரர்கள் என்ற கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. அதனைக் கண்ட பலரும் அந்த இளைஞரை பாராட்டியுள்ளனர். 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண