தன் முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல், தன் கனவு நிறுவனமான கூகுளில் பணிபுரிய 39 முறை விண்ணப்பித்து இறுதியாக வேலையைக் கைப்பற்றிய நபரை நெட்டிசன்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
விடாமுயற்சியா பைத்தியக்காரத்தனமா...
சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டைலர் கோஹென் எனும் இந்நபர் முன்னதாக இணை மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில், 39 முறை முயற்சித்து இறுதியாக கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று தனது கனவு நிறுவனமான கூகுளிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெற்று அசத்தியுள்ளார்.
தனது விடாமுயற்சி ஈடேறியது குறித்து முன்னதாக லின்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ள டைலர் கோஹென், ”விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே ஒரு கோடு தான் உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். 39 நிராகரிப்புகள், 1 வெற்றி" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
#acceptedoffer, #application போன்ற ஹாஷ்டேக்குகளுடன் டைலர் கோஹன் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு 35,000 லைக்குகளைப் பெற்று பலரையும் ஈர்த்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இறுதியாக 2019 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களிலும், 2020 ஜூன் மாதத்திலும் இவர் கூகுள் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், கோஹனுக்கு பலரும் இந்தப் பதிவில் வாழ்த்து தெரிவித்தும் தங்களது கரியர் பற்றிய கதைகளையும் பகிர்ந்தும் உற்சாகமூட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: Rare Pink Diamond: 300 ஆண்டுகளில் தோண்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய பிங்க் நிற வைரம்... அங்கோலா சுரங்கத்தில் கண்டெடுப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்