நம் ஊரில் ரீல்ஸ், புதுப்புது ட்ரெண்ட் என இன்ஸ்டாவில் இளைஞர்கள் கோலோச்சும் நிலையில், வெளிநாடுகளில் சாகச விரும்பிகள்,  மிருகக்காட்சி சாலை காப்பாளர்கள் என சுவாரஸ்யமான வேலைகளில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் சிங்கக் குட்டிக்கு பாலூட்டும் வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.


சிங்கக்குட்டி ஒய்யாரமாக சோஃபாவில் சாய்ந்தபடி மனிதர்களைப் போல் இந்த வீடியோவில் பால் குடிக்கும் நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இந்த வீடியோ ஹிட் அடித்துள்ளது.


மேலும், சிங்கக்குட்டியின் இந்த வீடியோவை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நெட்டிசன்கள் உணர்ச்சிப்பூர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


 






சிங்கங்கள் என்னதான் காட்டு ராஜாவாக வலம் வந்தாலும் இதைப்போல் தங்களைத் தூக்கி வளர்க்கும் மனிதர்களிடம் காட்டும் பிணைப்பை இறுதிவரை தக்கவைத்தபடியே வாழ்கின்றன.


இதே போல் க்றிஸ்டியன் எனும் சிங்கத்தை வளர்த்த இருவர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் வீடியோ 70களில் மிகப் பிரபலம்.


 



உணர்ச்சிப்பூர்வமான இந்த வீடியோ இன்று வரை இணையதளங்களில் அதிகம் கொண்டாடப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.


இதேபோல் மிருகக்காட்சி சாலை ஒன்றின் பெண் காப்பாளர் பசியுடன் இருக்கும் முதலையை அறிமுகப்படுத்தும் வீடியோ காண்போரை ஆச்சரியப்படுத்தி வைரலாகியுள்ளது.
 
The reptile zoohe reptile zoo எனப்படும் ஊர்வனவற்றுக்கான இந்த இன்ஸ்டா பக்கத்தில், பசியுடன் காத்திருக்கும் முதலைகளை விளையாட்டாகவும் அதே சமயம் கவனமாகவும் பெண் காப்பாளர் ஒருவர் டீல் செய்யும் இந்த வீடியோ காண்போரின் முதுகுகளை சில்லிட வைக்கும் வகையில் உள்ளது. 


 



 


இந்த முதலைகள் உள்பட இங்கிருக்கும் பெரும்பாலான பிராணிகளை இப்பெண் காப்பாளர் தான் அவற்றின் சிறு வயது முதல் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.