பிராங்க் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட 12 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளையும் கடந்து பெற்றுள்ளது. அப்படி என்ன தான் இந்த வீடியோவில் இருக்கிறது எனக் கேட்பவர்கள் முதலில் அதைப் பார்த்து விடுங்கள்.
இதோ இன்ஸ்டா வீடியோவுக்கான லிங்க்:
என்ன பார்த்துவிட்டீர்களா? இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா இது லைக், ஷேரால் நிறைந்த உலகமென்று.
அந்த வீடியோவில் ஒருவர் சில துணிக் கடை பொமைகளை எடுத்து அடுக்க முயல்கிறார். முதல் இரண்டு பொம்மைகளை எடுத்துச் செல்கிறார். கைவேறு, கால் வேறு என்றெல்லாம் வருகிறது. அடுத்து கீழே கிடக்கும் மற்றொரு பொம்மையை எடுக்க முயற்சிக்கிறார். அது அசைக்கவே கடினமாக இருக்கிறது. பின்னர் ஏதோ மம்மி போல் அதுவே நகர்ந்து நடக்கிறது. மனிதர் ஒரு நிமிடத்தில் பயத்தில் திக்குமுக்காடிப் போகிறார்.
இந்த பிராங்க் வீடியோவை நிறைய பேர் ரசிப்பதாகவே தெரிவித்துள்ளனர்.
நம்மூர் பிராங்குகளும் அதற்கு வந்த தடையும்:
வெளிநாட்டுச் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட பிராங்க் வீடியோக்களைப் பார்த்து தான் நம்மூரிலும் பிராங்க் வீடியோக்கள் பிரபலமாகின. ஆனால், அது ஒருகட்டத்தில் எல்லை மீறி ஆபாசமாகவும், அபாயகரமானதாகவும் மாறவே பிராங்களுக்கு பல கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. டிக்டாக், மியூஸிக்கலி, யுடியூப் எல்லாம் ஒரு வகை எனப் பிரித்துவைத்தால். இந்த பிராங்க் ஷோ இன்னொரு ரகம். இந்தியாவைப் பொறுத்தவரை இது இடைஞ்சல் ரகம் தான். பிராங்க் ஷோ என்ற பெயரில் சாலையில் செல்லும் பெண்கள், முதியோர், குழந்தைகளைப் பயமுறுத்துவது, எரிச்சலூட்டுவது, கோபமடையச் செய்வது, அழவைப்பது என எல்லை மீறிச் சென்றது.
இப்படி பிராங்க் ஷோ என்ற பெயரில் சென்னை மெரினாவில் ஒரு இளம் பெண்ணிடம் ஆபாசக் கேள்வியைக் கேட்டி அதை யூடியூபிலும் சில இளைஞர்கள் வெளியிட்டனர். அப்போது தான் தமிழ்ச் சமூகம் விழித்தது. இது பிராங்க அல்ல நியூசன்ஸ் என கொதித்தெழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நீதிமன்றம் கூட தலையிட்டு யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களின் பிளாட்ஃபார்மில் பகிரப்படும் கன்டென்ட்டை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இன்று ஐடி சட்டத்திருத்தில் இன்னும் பல கிடுக்கிப்பிடிகள் வந்ததுவிட்டன. ஆனால் அதிலும் சில அரசியல் உள்நோக்கத்துடன் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கிறது என்பது வேறு டிபார்ட்மென்ட். பிராங்க் செய்யலாம். விளையாடலாம். இறுக்கமாகவே வாழ்க்கையை நகர்த்த முடியாது. ஆனால் அதிலும் ஒரு வரைமுறை வேண்டும். யாரையும் துன்புறுத்தாமல், வருத்தப்படுத்தாமல், எத்ந உயிரினத்தையும் வதைக்காமல் நாம் பார்த்த இந்த வீடியோவில் இருக்கும் பிராங்க் போல் இருந்தா; லைக்ஸும், ஷேரும் நிச்சயம்.