சமூக வலைதளத்தில் செல்ல பிராணிகள் தொடர்பாக எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் அது எளிதாக வைரலாகும். அதிலும் குறிப்பாக அந்த செல்லப்பிராணி செய்யும் சேட்டை என்றால் அந்த வீடியோ ட்ரெண்டாகியே தீரும். அந்த வகையில் தற்போது நாயும் அதன் உரிமையாளாரும் பாராகிளைடிங் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி இந்த வீடியோ வைரலாக காரணம் என்ன?
சாம்யார்டு என்ற நபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், அவரும் அவருடைய 3 வயது செல்ல பிராணியான நாயும் அழகான மலைகளுக்கு மேல் பாராகிளைடிங் செய்வதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் பலரும் வியப்புடனும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த நாயை தத்தெடுத்து அதை பாரா கிளைடிங் விளையாட்டிற்கு தயார் செய்தது தொடர்பாக வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "என்னுடன் ஓகா இணைந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. அந்த இரண்டு மாதங்களில் என்னுடன் வானத்தில் பறக்கும் அளவுக்கு ஓகா இணைந்துள்ளது. இந்த நாள் என்னுடைய வாழ்வில் மிகவும் மறக்க முடியாத நாள். ஏனென்றால் கடந்த ஒராண்டிற்கு முன்பாக நான் மிகவும் உடைந்த மனநிலையில் இருந்தேன். அப்போது நான் இப்படி ஒருநாள் வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஓகா என்னுடைய வாழ்வில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்துள்ளது. முதலில் ஓகாவை தத்தெடுக்கும்போது எனக்கு நாய்களிடம் பழகுவது தெரியாது. இதற்காக ஒரு தனி வகுப்பிற்கு சென்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு நாய் ஒன்று தன்னுடைய உரிமையாளருடன் பாரா கிளைடிங் செய்தது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.