மகன் கணக்குப் பாடத்தில் ஒற்றை இலக்க மார்க் வாங்கியதால் அவரது தந்தை தேம்பித் தேம்பி அழுத சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

Continues below advertisement


கணக்கு வரல...


சீனாவின் ஸெங்ஸூ பகுதியில் வசிக்கும் தந்தை ஒருவர், தன் மகன் பள்ளியில் படிப்பது தாண்டி வீட்டிலும் படிக்கும் வகையில் சீரிய பயிற்சி அளித்து வந்துள்ளார்.


குறிப்பாக கணக்குப் பாடத்தில் வீக்காக இருக்கும் தன் மகனை பார்த்து பார்த்து ஒரு வருடமாக ட்ரெய்ன் செய்துள்ளார் இந்தத் தந்தை.


வைரலான தந்தை


இந்நிலையில், முன்னதாக மகனின் தேர்வு முடிவுகள் வந்த நிலையில், கணக்குப் பாடத்தில் மகன் ஒற்றை இலக்கத்தில் 6 மதிப்பெண்கள் மட்டுமே மகன் எடுத்துள்ளது கண்டு நொந்து போன தந்தை தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இவர் அழும் இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.


 






இந்த வீடியோவில், ”இனி நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை, என்னுடைய அனைத்து முயற்சியும் வீணாகிவிட்டது, அவன் இனி தானாகவே போராடிக் கொள்ளட்டும்” என்று பேசியவாறு அவர் தேம்பி அழும் காட்சி நெட்டிசன்களை சிரிக்க வைத்து வருகிறது.


மேலும், இந்த மாணவன் கணக்குப் பாடத்தில் ஏற்கெனவே 40 - 50 மதிப்பெண்கள் வரை எடுத்து வந்த நிலையில், அவரது தந்தை கொடுத்த எக்கச்சக்க அழுத்தத்தால் தான் மாணவன் மிகக்குறைந்த மார்க் எடுத்திருக்கக் கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண