சிறுவர்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதாக டிக்டாக் பிரபலமான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


சமீப காலங்களாக டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பல குற்றங் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது டிக்டாக் மூலம் பெண் ஒருவர் சிறுவர்களுக்கு ஆபாசமாக சைகை காட்டி காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்தவர் கையில் ஸ்டிரிக்லாண்ட்(30). இவர் டிக்டாக் தளத்தில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு பல ரசிகர்களை கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் நீச்சல் குளத்திலிருந்து ஒரு டிக்டாக் வீடியோ ஒன்றை செய்துள்ளார். அத்துடன் அங்கு இருந்து அவர் ஒரு டிக்டாக் நேரலையையும் செய்துள்ளார். 


அப்போது அங்கு அவருக்கு அருகே இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்துள்ளனர். அவர்களை பார்த்து ஸ்டிரிக்லாண்ட் ஆபாசமாக சைகை செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது அவர் தன்னுடைய உள்ளாடையை அகற்றி மார்பகங்களை அச்சிறுவர்களை நோக்கி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் சிறுவர்களுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். 




அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் ஸ்டிரிக்லாண்டை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த டிக்டாக் வீடியோவையும் பார்த்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்டிரிக்லாண்ட், “அந்த சிறுவர்கள் இதுபோன்று ஏற்கெனவே நிறையே விஷயங்களை பார்த்து இருப்பார்கள். அடுத்தவர்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித அக்கறையும் இல்லை” என்று கூறியுள்ளார். 


அவர் மீது குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவருடைய வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் உள்ளனர். சிறுவர்களிடம் இளம் பெண் ஒருவர் அப்படி நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொள்பவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண