2004 ஆம் ஆண்டு உலக மக்களை அச்சுறுத்துவதாக இருந்தது இயற்கை பேரிடர் சுனாமி. குறிப்பாக கடலோரத்தில் அமைந்திருந்த நாடுகள், தீவுகள் எனை அனைத்து பேரலைக்கு இரையாகிப்போனது. அன்று பாதிப்பை சந்தித்த தீவுகளுள் ஒன்றுதான் இன்று பல பிரபலங்களையும் கவர்ந்திழுக்கும் மாலத்தீவு. சுனாமிக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து , நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்ததும், அத்தீவின் அமைச்சரவி கூட்டம் கூடியது. சரியாக 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி. ஆனால் வழக்கம் போல ஏ.சி அறைகளில் இல்லாமல், கடலுக்கு அடியில் கூடியது அப்போதைய அமைச்சரவை கூட்டம். எதற்காக இப்படி வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்  என உற்றுநோக்கின.




கூட்டத்தில் கருப்பு டைவிங் உடைகள்  மற்றும் முகமூடிகளை அணிந்து, ஜனாதிபதி நஷீத், 11 அமைச்சர்கள் துணைத் தலைவர் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கடலுக்கு அடியில் சுவாசிப்பதற்கான சிலிண்டர்கள், கூட்டத்திற்கு தேவையான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 12 அடி 8 இன்ச் அளவில் அதாவது 3.8 மீட்டர் ஆழத்தில் அந்த கூட்டம்  நடைப்பெற்றது. நஷீத் தனது கைகளை அசைத்து கூட்டத்தை தொடங்கி வைக்க, அனைவரும் சைகையிலேயே பேசிக்கொண்டனர். அது அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 30 நிமிடங்கள் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில் அவசர கால “SOS” MESSAGE க்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதற்காக பிளாஸ்டிக் ஸ்லேட் மற்றும் நீர்ப்புகா பென்சில்களைப் பயன்படுத்தினர். வெப்பநிலை மாறுபாட்டால் மாலத்தீவு சந்திக்க போகும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.யுஎன் கணிப்புகள்  மாலத்தீவு வருகிற  2100 க்குள்  கடலுக்குள் மூழ்கிவிடும்  என கணித்துள்ளன. மாலத்தீவு மட்டுமல்ல கடலோரத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும்  இதுதான் கதி.





 


"காலநிலை மாற்றம் சரிபார்க்கப்படாவிட்டால் மாலத்தீவுக்கு என்ன நடக்கிறது மற்றும் என்ன நடக்கும் என்பதை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும், நாம் வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தவே   இப்படியான கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்தோம் என்று ஜனாதிபதி நஷீத் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது மாலத்தீவில் கடல் மட்டம் உயர்ந்துக்கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மாலத்தீவு அன்று உணர்ந்த தீவிரத்தை இன்று உலகின் பல நாடுகள் உணர தொடங்கியுள்ளன.


காலநிலை மாற்றம், பனிச்சரிவு, வெப்பமயமாதல், அதீத மழை, வெள்ளம் , கடல் சீற்றம், நிலநடுக்கம் என ஆண்டுக்கு ஆண்டுக்கு உலகின் ஏதாவது ஒரு மூலையில் உலகம் சிறுக சிறுக அழிந்து வருவதை சராசரி மனிதர்களாலும் உணர முடிகிறது. சோமாலியாவை போலவே பல நாடுகள் பசியால் அழிந்து போகும் என அச்சுறுத்துகிறது சில ஆய்வறிக்கை. அதனை  உணர்ந்து புவி வெப்பமாதல் பிரச்சனைகளில் இருந்து  பூமியை காப்பாற்ற உலக நாடுகள ஒன்றிணைந்து திட்டமிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.